Kathir News
Begin typing your search above and press return to search.

விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ.90 ஆயிரம் கோடி : 95 நிமிடத்தில் அசரடிக்கும் அறிவிப்புகள் - முழு விவரம்.!

விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ.90 ஆயிரம் கோடி : 95 நிமிடத்தில் அசரடிக்கும் அறிவிப்புகள் - முழு விவரம்.!

விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ.90 ஆயிரம் கோடி : 95 நிமிடத்தில் அசரடிக்கும் அறிவிப்புகள் - முழு விவரம்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Aug 2019 10:35 AM IST

விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ.90 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி தனது 95 நிமிட சுதந்திர தின உரையில் தெரிவித்தார்.
நேற்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரை ஆற்றினார். அவர் 95 நிமிடங்கள் பேசினார். அவரது உரையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்களின் தொகுப்பு.

21-ம் நூற்றாண்டின் தேவைகளையொட்டி, நவீன உள் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இந்த வகை நவீன உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்காக ரூ.100 லட்சம் கோடி செலவிடப்படும்.
நாட்டின் மக்கள் தொகை பெருக்கம் இனி வரும் தலைமுறையினருக்கு பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கும். சிறிய குடும்பம் என்ற கொள்கையை பின்பற்றுவோர் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றனர். இதுவும் தேசப்பற்றின் ஒரு வடிவம்தான்.
நாம் ஏற்றுமதியை எப்படி பெருக்கலாம் என்று சிந்திக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.
முத்தலாக் தடை சட்டத்தை அமல்படுத்தி முஸ்லிம் பெண்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.350 லட்சம் கோடி) பொருளாதார நாடாக இந்தியா மாறுவது உறுதி.

ஒரே அட்டை:
ஒரே நாடு ஒரே அட்டை என்ற வகையில் ஒரு அட்டை (ஸ்மார்ட் கார்டு) உருவாக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு பஸ் கட்டணம், வாடகைக்கார் கட்டணம், வாகனம் நிறுத்துமிட கட்டணம் செலுத்தலாம். பொருட்கள் வாங்கலாம். ஏ.டி.எம். மையங்களில் பணமும் எடுக்கலாம்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒரு முறை பயன்படுத்துகிற பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை நிறுத்துவோம். சணல்பை, துணிப்பைகளை பயன்படுத்துவோம்.
காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள் நிறைவேறுவதற்கு ஒவ்வொருவரும் உதவிக்கரம் நீட்டுவது கடமை. அரசியல் சாசன சட்டத்தின் பிரிவுகள் 370, 35-ஏ ஆகியவற்றை ரத்து செய்ததின் மூலம் சர்தார் வல்லபாய் பட்டேல் கனவு நனவாகி உள்ளது.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நடத்துகிற நாடுகளை அம்பலப்படுத்துவதற்கு இந்தியா தொடர்ந்து கடுமையாக பாடுபடும்.
இந்தியா திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நாடு என அறிவிக்கும் நிலை வரும்.
ஒவ்வொரு கிராமத்திலும் பிராட்பேண்ட் இணைய தள வசதி ஏற்படுத்தப்படும்.

ரூ.90 ஆயிரம் கோடி:
கிராமப்புறங்களில் 1½ லட்சம் நல வாழ்வு, சுகாதார மையங்கள் அமைக்கப்படும்.
3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஒரு மருத்துவ கல்லூரி அமைத்து, டாக்டராக விரும்பும் நமது இளைய தலைமுறையினரின் கனவு நனவு ஆக்கப்படும்.
2 கோடிக்கு மேற்பட்ட ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும்.
ஆட்சிக்கு வந்து 10 வாரங்களுக்குள் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் முக்கிய திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி விவசாயிகள் நிதி உதவி திட்டத்தின்கீழ் விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் ரூ.90 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளது.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News