Kathir News
Begin typing your search above and press return to search.

மகாராஷ்டிராவில் அரசு அமைப்பதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் தொடர்பு எதுவும் இல்லை! பாஜக விரைவில் முடிவெடுக்கும்! நிதின்கட்கரி திட்டவட்டம்.!

மகாராஷ்டிராவில் அரசு அமைப்பதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் தொடர்பு எதுவும் இல்லை! பாஜக விரைவில் முடிவெடுக்கும்! நிதின்கட்கரி திட்டவட்டம்.!

மகாராஷ்டிராவில் அரசு அமைப்பதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் தொடர்பு எதுவும் இல்லை! பாஜக விரைவில் முடிவெடுக்கும்! நிதின்கட்கரி திட்டவட்டம்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Nov 2019 6:24 PM IST



மகாராஷ்டிராவில் அரசாங்கத்தை உருவாக்கும் நடவடிக்கைகளுடன் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை பெயரை இணைத்து பேசக்கூடாது என்று மூத்த மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறினார்.


அவர் மேலும் கூறுகையில், மாநிலத்தில் அரசு அமைப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும், சிவ சேனாவை விட பாஜக அதிக எண்ணிக்கையிலான இடங்களை வென்றதால், தனது கட்சியை சேர்ந்தவர் மட்டுமே முதல்வராக முடியும் என்றும் கூறினார்.


மகாராஷ்ட்ராவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தை தீர்க்கும் வகையில் கட்கரி தனது சொந்த மாநிலமான மகாராஷ்டிரா சென்று முதல்வர் பதவியை ஏற்பார் என கூறப்படுவது பத்திரிக்கைகளின் ஹேஷ்யம் என்று கூறிய அவர் அது போன்ற திட்டம் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக கூறினார். மேலும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டபடி "தேவேந்திர ஃபட்னாவிஸ் புதிய அரசாங்கத்திற்கு தலைமை தாங்குவார்" என்று கட்கரி கூறினார்.


மற்றொரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில் , "ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கோ அல்லது சங்கத்துக்கோ மகாராஷ்ட்ராவில் ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் எந்த தொடர்பும் இல்லை. இந்த விஷயத்தில் ஆர்எஸ்எஸ் தலைவரை இணைப்பது பொருத்தமற்றது” என்றார்.


தேர்தலுக்கு முன்னதாக சிவசேனாவில் இணைந்த பண்ணை ஆர்வலர் கிஷோர் திவாரி பாஜகவுக்கும் சேனாவுக்கும் இடையிலான அதிகார மோதலைத் தீர்க்க கட்கரியை நியமிக்க மோகன் பகவத் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இந்த விவகாரத்தில் சங்கத்தின் "மவுனம்" குறித்து மக்கள் கவலைப்படுவதாகவும் அவர் கூறினார்.


இது குறித்து கட்கரி கூறுகையில், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆணையை பாஜக மற்றும் சிவசேனாவுக்கு மக்கள் வழங்கியுள்ளனர், அரசு எந்த முறையில் அமைய வேண்டுமோ அந்த முறையில் விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்றார். "பாஜக 105 இடங்களை வென்றுள்ளது, முதலமைச்சர் வெளிப்படையாக பாஜகவைச் சேர்ந்தவர். சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களை வென்ற கட்சிக்குதான் முதலமைச்சர் பதவி இருக்கும்" என்று அவர் கூறினார்.


Translated Article From REPUBLIC WORLD


Next Story
கதிர் தொகுப்பு
Trending News