RSS அணி வகுப்பிற்கு நீதிமன்றம் அனுமதி அளித்த பின்னணி!
ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நிபந்தனையுடன் நடைபெறலாம் என்று நீதிமன்றம் உத்தரவு.
By : Bharathi Latha
75 ஆவது சுதந்திர தின விழா அம்பேத்கரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா விஜயதசமி ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தில் 51 இடங்களில் அக்டோபர் இரண்டாம் தேதி அன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் அணி வகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி டி.ஜி.பி உள்ளிட்டோரிடம் இருந்து மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
கடலூர் சண்முகசுந்தரம், ஈரோடு செந்தில் உள்ளிட்ட ஒன்பது பெயர் மனுதாக்கல் தனித்தனியாக செய்திருந்தார்கள். அதில் அணிவகுப்பு ஊர்வலத்தை ஒழுங்குபடுத்த மட்டுமே போல விசாரிக்க அதிகாரம் உள்ளது. சட்ட ரீதியாக அனுமதி மறுக்க முடியாது. ஜம்மு காஷ்மீர் உள்ளிட்டு அனைத்து மாநிலங்களிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சீருடையில் பேண்ட் வாத்திய முழங்க அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்படும். இந்த நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அனுமதி மறுப்பது சட்டவிரோதமானது என்று கூறப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மாநில தலைமை முதல் தலைமை குற்றவியல் வக்கீல், அசன் முகமது ஜின்னா ஆஜராகி எந்த பாதையில் ஊர்வலம் செல்ல போகிறது.
எந்த இடத்தில் ஆரம்பித்து எந்த இடத்தில் முடிவடைய போகிறது என்ற விவரங்கள் மனுவில் தெரிவிக்கவில்லை. ஊர்வலத்தில் கோஷங்கள் எழுப்பக்கூடாது. காயங்கள் ஏற்படுத்தும் எந்த பொருளுக்கும் அனுமதி இல்லை, பதட்டம் மிகுந்த பகுதிகளில் செல்லக்கூடாது என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வரும் அக்டோபர் இரண்டாம் தேதி ஆர்.எஸ்.எஸ் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கு வருகின்ற 28 தேதிக்குள் போலீசார் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கூறி இந்த வழக்கை தற்போது முடித்துவிட்டு உத்தரவிட்டார்.
Input & Image courtesy: Dinamalar News