உக்ரைனில் குண்டுமழை: ரஷ்ய ராணுவம் முதலில் எதை கைப்பற்ற வேண்டும்: புதின் பிறப்பித்த கட்டளை!
சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு கடும் எதிர்ப்புகளை ரஷ்யா அதிபர் தெரிவித்தார். இதனால் உக்ரைன் மீது போர் தொடுக்க அந்நாட்டின் எல்லையில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டிருந்தது. இதனால் எந்நேரத்திலும் ரஷ்யா தாக்குதலை தொடரலாம் என கூறப்பட்டது.
By : Thangavelu

இந்நிலையில், போரை தவிர்ப்பதற்கு ரஷ்யாவுக்கு ஐநா வேண்டுகோள் விடுத்திருந்தது. ஆனால் அதனை புறம்தள்ளவிட்டு தற்போது உக்ரைன் மீது ரஷ்யா ராணுவம் குண்டுமழை பொழிந்து வருகிறது. இதற்கு அதிபர் விளாடிமிர் புதின் பிறப்பித்த உத்தரே என்று சொல்லப்படுகிறது. இந்த தகவலை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளது.
மேலும், ரஷ்யா ராணுவத்திற்கு அதிபர் பிறப்பித்த கட்டளைகள், முதலில் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை கைப்பற்றுமாறு கூறியுள்ளார். இதனால் உக்ரைன் படைகள் பின்னடைவை சந்திக்க நேரிடலாம் என கூறப்படுகிறது. இந்த போரால் கச்சா எண்ணெய் கடுமையாக உயர வாய்ப்பு உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறிவருகின்றனர். போரை கைவிட்டால் அனைத்து உலக நாடுகளுக்கும் நன்மை எனவும் கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால் இதனை காதில் வாங்காத ரஷ்யா, தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருகிறது.
Source: Daily Thanthi
Image Courtesy: Daily Express