Kathir News
Begin typing your search above and press return to search.

ரஷ்யா உக்ரைன் போர் விவகாரம் : ஜி 20 உச்சி மாநாட்டில் முக்கிய பிரகடனம்!

ரஷ்யா உக்ரைன் போர் விவகாரத்தில் ஒருமைப்பாடு, இறையாண்மையை நிலை நிறுத்த வேண்டும் என ஜி 20 உச்சி மாநாட்டில் பிரகடனம் வெளியாகியுள்ளது. இதற்கு ஜி-20 தலைவர்கள் ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா உக்ரைன் போர் விவகாரம் : ஜி 20 உச்சி மாநாட்டில் முக்கிய பிரகடனம்!

KarthigaBy : Karthiga

  |  10 Sep 2023 4:00 AM GMT

ஓராண்டு கடந்த நீடிக்கும் உக்ரைன் ரஷ்ய போர் விவகாரத்தில் சர்வதேச பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மையை நிலை நிறுத்த வேண்டும் என ஜி - 20 உச்சி மாநாட்டில் டெல்லி பிரகடனம் வெளியாகியுள்ளது. இதற்கு தலைவர்கள் ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளனர் . நேற்று வெளியிடப்பட்ட அந்த பிரகடனத்தில் அணு ஆயுதங்களின் பயன்பாடு அச்சுறுத்தல்கள் ஏற்றுக் கொள்ள முடியாது .

சர்வதேச பிராந்திய ஒருமைப்பாடு இறையாண்மை அரசியல் சுதந்திரத்திற்கு எதிராக ஒரு நாட்டை கைப்பற்றுதல், அச்சுறுத்தல், சக்தியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ராணுவ மற்றும் அதனுடன் தொடர்புடைய அழிவு தாக்குதல்களை நிறுத்த வேண்டும். பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை, சர்வதேச மனிதாபிமான, சட்டம் அமைதி மற்றும் உறுதி தன்மையை பாதுகாக்கும் வகையில் பலதரப்பு அமைப்புகளை உள்ளடக்கிய சர்வதேச சட்டங்களின் அடிப்படை கொள்கைகளை எப்போதும் நிலைநிறுத்த அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.

போரால் உலக பொருளாதாரத்தில் ஏற்படும் மிக மோசமான தாக்கத்தை நிவர்த்தி செய்ய நம் முயற்சிகளால் நாம் ஒன்றிணைவோம் .நாடுகளிடையே மோதல்கள் நெருக்கடிகள் அமைதி மற்றும் ராஜதந்திர பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் உக்கரையில் விரிவான நியாயமான நீடித்த அமைதியை ஆதரிக்கும் அனைத்து ஆக்கபூர்வமான முயற்சிகளையும் வரவேற்போம். இது போருக்கான தருணம் அல்ல என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

SOURCE :DINAKARAN

Next Story
கதிர் தொகுப்பு
Trending News