உக்ரைன் மீது போர் தொடங்கிய ரஷ்யா: இந்திய பங்குச்சந்தை கடும் சரிவு!
ரஷ்ய அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா ராணுவத்தினர் குண்டுமழை பொழிந்து வருகின்றனர். இதனால் இரு நாடுகளிலும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
By : Thangavelu
ரஷ்ய அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா ராணுவத்தினர் குண்டுமழை பொழிந்து வருகின்றனர். இதனால் இரு நாடுகளிலும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
ரஷ்ய அதிபர் புதினுக்கும், உக்ரைன் அரசுக்கும் மிகப்பெரிய மோதல் போக்கு நிலவி வந்தது. இந்த மோதல் போராக மாறியுள்ளது. இதனால் உக்ரைனில் வசித்து வரும் பிற நாட்டினர் வெளியேறி வருகின்றனர். சில நாட்கள் அமைதி காத்து வந்த ரஷ்யா இன்று காலை முதல் போரை தொடங்கியுள்ளது. முக்கிய நகரங்கள் மீது வான்வெளி தாக்குதலை தொடங்கியிருப்பதால் அங்குள்ள மக்கள் மிகவும் அச்சத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். பதில் தாக்குதலை உக்ரைன் ராணுவத்தினரும் தொடர்ந்து வருவதால் எல்லைப்பகுதியில் மிகப்பெரிய பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கியிருப்பதால் இந்திய பங்குச்சந்தைகள் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,366 புள்ளிகள் சரிந்து தற்போது 55,865 புள்ளிகளில் உள்ளது. அது மட்டுமின்றி கச்சா எண்ணெய் விலையும் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவி வருகிறது. இரண்டு நாடுகள் போரை கைவிட்டு அமைதி காத்தால் மட்டுமே மற்ற உலக நாடுகளுக்கு நன்மை பயக்கும் என பொருளாதார அறிஞர்கள் கூறியுள்ளனர்.
Source, Image Courtesy: Puthiyathalaimurai