சபரிமலை விவகாரம், சட்டமும் - நம்பிக்கையும்!
சபரிமலை விவகாரம், சட்டமும் - நம்பிக்கையும்!
By : Kathir Webdesk
சபரி மலை விவகாரம் இந்த மாதம் உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்கு வந்த பொது
நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான குழு அதை 7 பேர் கொண்ட
அரசையால் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. கேரளா மாநிலத்தின் புனித
மற்றும் வழிபாடு தளம் நுழைவு சட்டம் 1965 ன் படி சபரிமலை கோவிலுக்கு
பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சபரி மலை அய்யப்பன் கோவிலிலுள்ள
ஐயப்பன் ஒரு “நைஷ்டிக பிரமச்சாரி “என்பதால் பெண்கள் இந்த கோவிலில்
அனுமதிக்க படுவதில்லை. இது சம்பந்தமான வழக்கு ஒன்று உயர் நீதி
மன்றதிற்கு வந்த பொது இந்த அனுமதி மறுக்கப்படுவதில் தவறில்லை என்றும்
இது காலம் காலமாக இருந்து வருகிற நம்பிக்கை என்றும் நீதிமன்றம் 1991 இல்
தீர்ப்பு கூறியது.
சமீபத்தில் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து, உச்ச நீதிமன்றம்
சபரிமைலயில் பெண்கள் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறிய தீர்ப்பு
நாடெங்கும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
பெண்களை சபரிமைலயில் அனுமதிக்க வேண்டும் என்று சொல்லும் தரப்பினர்
அரசையால் சட்ட பிரிவு 25, உட்பிரிவு 2 இ மேற்கோள் காட்டி எந்த வழிபாடு
தளத்திலும் எந்த வேற்றுமையில் அடிப்படையிலும் அனுமதி மறுப்பது தவறு
என்று கூறுகிறார்கள். மேலும் அரசியில் சட்ட பிரிவு 14, 15, 17 ன் படி சம
பார்வையற்ற ஏற்ற தாழ்வுகள் பார்க்கிற தீண்டாமையை வலியுறுத்தும்
பழக்கமாகும் என்று கூறுகிறார்கள்.
அனால் உண்மையில் இந்த சட்டபிரிவுகளை
சமூக ஏற்றத்தாழ்வுகளை சமன்படுத்தும் நோக்கத்துடன் பயன்படுத்தவேண்டுமே
தவிர, வழி வழி யாக வந்த கலாச்சார மத நம்பிக்கையின் அடிப்படையிஇல்
இயங்கும் ஒரு மத வழிபாடு தலத்தில் பயன்படுத்துவது தவறான
முன்னுதாரணமாக ஆகிவிடும். மேலும் அதே அரசியில் சாசனத்தின் பிரிவு 26
தங்கள் மத விவகாரங்களை தாங்களே நிர்வகிக்கும் உரிமையையே மத
அமைப்புகள் பெற்றிருக்கின்றன.
முன்னர் வழங்கப்பட்டு தீர்ப்பில் மாற்று கருத்தை தெரிவித்த நீதிபதி
மல்ஹோத்ரா “முதலில் இது போன்ற மத விவகாரங்களில் நீதிமன்றம்
தலையிடாமல் இருப்பதே சிறந்தது, ஏனென்றால் நம்பிக்கையின் அடிப்படையில்
நாடாகும் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட்டால் பின்னர் இது போன்ற
ஆயிரக்கணக்கான நம்பிக்கைகளுக்கு நீதிமன்றத்தின் அங்கீகாரம்
தேவயானதாகிவிடும். மேலும் இது சபரிமலையூடு நிற்காமல் நாடெங்கிலும்
எதிரொலிக்கும் என்று கூறியிருந்தார்.
இப்பொது 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாட்டப்பட்டிருக்கும் இந்த
வழக்கில் " அத்யாவசமான மத வழிபட்டு வழக்கங்கள்" என்ற தாத்பர்யத்தை
நீதிபதிகள் ஆராயும் வாய்ப்பும், ஒருவேளை மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பும்
உள்ளது. இந்த "அத்தியாவசியமான மத வழிபாடு வழக்கங்கள் " என்ற கோட்பதே
"இஸ்மாயில் பாறூயூஐ வெர்சஸ் யூனின் ஒப்பி இந்தியா வழக்கில்
கடைபிடிக்கப்பட்டு, ராமர் கோயிலில் சாதகமான தீர்ப்பு வர வழிகோலியது என்பது
குறிப்பிடத்தக்கது.