சபரிமலை கோவில் வருமானம் ரூ. 78.92 கோடி: கோவில் நிர்வாகம் தகவல்.!
சபரிமலை கோவிலில் இந்த வருட வருமானம் ரூ. 78.92 கோடி என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
By : Bharathi Latha
இந்த மண்டல சீசனில் வெள்ளிக்கிழமை வரை சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 10.35 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர். மேலும் இது பொருந்தும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் K. ஆனந்த கோபன் கூறுகையில், "கோயிலில் இருந்து இதுவரை 78.92 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்துள்ளது.
மகரவிளக்கு உற்சவத்திற்காக கோவில் நடை டிசம்பர் 30-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப் படுகிறது. அன்றைய தினம் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் பக்தர்கள் டிசம்பர் 31 முதல் ஜனவரி 19 வரை தரிசனம்"செய்ய அனுமதிக்கப் படுவார்கள். ஜனவரி 11ம் தேதி எருமேலி பேட்ட துள்ளல் நடக்கிறது.காலை அம்பலப்புழா சங்கத்தினர் பேட்ட துள்ளலும், மதியம் ஆலங்காடு குழுவினரும் பேட்ட துள்ளல் நிகழ்ச்சி நடத்துகின்றனர்" என்று அவர் மேலும் கூறினார்.
2019 ஆம் ஆண்டு பெரும் தொற்று பரவியதில் இருந்து பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக கோவில் நிர்வாகத்திற்கு 8.39 ரூபாய் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்பொழுது சபரிமலை பக்தர்களுக்கு கோவிட் தொடர்பான பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் இந்த முறை வருவாய் அதிகரிப்பு சாத்தியமானது என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
Input & Image courtesy: Onmanorama