Kathir News
Begin typing your search above and press return to search.

சாத்வி பிரக்யாவுக்கு இராணுவ துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக பதவி! மத்தியபிரதேச பாஜகவினர் மகிழ்ச்சி!

சாத்வி பிரக்யாவுக்கு இராணுவ துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக பதவி! மத்தியபிரதேச பாஜகவினர் மகிழ்ச்சி!

சாத்வி பிரக்யாவுக்கு இராணுவ துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக பதவி!  மத்தியபிரதேச பாஜகவினர் மகிழ்ச்சி!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Nov 2019 12:12 PM IST



இராணுவ அமைச்சகம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாத்வி பிரக்யா உறுப்பினராக இடம் பெற்றுள்ளார்.
மத்தியபிரதேசத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற மலேகான் குண்டுவெடிப்பில் காங்கிரஸ்காரர்களால் வேண்டுமென்றே குற்றம்சாட்டப்பட்டு சிறையில் தள்ளப்பட்டவர் சாத்வி பிரக்யா. அந்த கால கட்டத்தில் பஜ்ரங் தள் அமைப்பின் மாநில அளவிலான நிர்வாகியாக இருந்த அவர் மிக சிறப்பாக செயல்பட்டவர்.
தான் குற்றவாளி இல்லை என்பதை நிரூபிப்பதற்கான பல ஆதாரங்களைக் கொடுத்தும் அப்போதைக்கு மத்தியபிரதேசத்திலும் மத்தியிலும் இருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு இவரை விடுதலை செய்யவோ அல்லது ஜாமீன் வழங்கவோ மறுத்து விட்டது. பெண் என்றும் பாராமல் இவரை சித்திரவதை செய்தது.


பிறகு ஜாமீனில் வெளி வந்துள்ள அவர் சென்ற 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவில் இணைந்து போபால் மக்களவை தொகுதி வேட்பாளரானார். காங்கிரஸ் தலைவரும், மத்தியபிரதேச முன்னாள் முதல்வருமான திக்விஜைசிங்கை 3,64,822 வாக்கு வித்தியாசத்தில் வென்றது மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்பட்டது.



மத்தியபிரதேசத்தில் உமா பாரதிக்கு அடுத்தபடியாக மிகவும் துணிச்சலான இந்துத்வா கோட்பாட்டை கொண்ட பெண்மணியாக பார்க்கப்படும் இவருக்கு இராணுவ அமைச்சகம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளது மத்தியபிரதேச பாஜக தொண்டர்கள் மற்றும் இந்துத்வா அமைப்பினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Source:- INDIA TODAY


Next Story
கதிர் தொகுப்பு
Trending News