தமிழிசை சவுந்தரராஜன் படத்தை முகநூலில் அநாகரீகமாக பயன்படுத்திய மன்னார்குடியை சேர்ந்த சாதிக்பாட்சா சிறையில் அடைப்பு!
தமிழிசை சவுந்தரராஜன் படத்தை முகநூலில் அநாகரீகமாக பயன்படுத்திய மன்னார்குடியை சேர்ந்த சாதிக்பாட்சா சிறையில் அடைப்பு!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவன் சாதிக்பாட்சா. இவன் தனது முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளை இடுவதும், குறிப்பாக ஹிந்து, பா.ஜ.க. தலைவர்களை கேவலமாக விமரிசிப்பதும், அதில் தன்னை ஒரு பெரிய பிஸ்தாபோல காட்டிக் கொண்டு வருவதும் ஏற்கனவே பலருக்கும் தெரியும்.
இந்த நிலையில் அண்மையில் இவன் தற்போது தெலங்கானா கவர்னராக உள்ள தமிழிசை சவுந்தர்ராஜன் படத்தை தனது முக நூலில் பதிவு செய்து நாகரீகமற்ற முறையில் அந்த படத்தை பயன்படுத்தியது அங்குள்ள பா.ஜ.க. கட்சிக்காரர்களுக்கு தெரிய வந்தது.
இதனால் வெகுண்டெழுந்த பா.ஜ.க.காரர்கள் மன்னார்குடி நகர செயலாளர் ரகுராமன் தலைமையில் ஆதாரங்களுடன் புகார் அளித்தனர். போலீசார் விரைந்து சென்று சாதிக்பாட்சாவை கைது செய்து மன்னார்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவனை 15 நாட்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டது கோர்ட்.