மணல் கொள்ளை தி.மு.க! மணல் கடத்தல் மூலம் கோடீஸ்வர் ஆன தி.மு.க பிரமுகர்!!
மணல் கொள்ளை தி.மு.க! மணல் கடத்தல் மூலம் கோடீஸ்வர் ஆன தி.மு.க பிரமுகர்!!
By : Kathir Webdesk
பிரியாணி கடைகளில் திருட்டு, பஜ்ஜி கடையில் திருட்டு, விபத்தில் இறந்த பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடியது, பியூட்டி பார்லரில் புகுந்து ரவுடித்தனம் செய்தது, துணிக்கடையில் பணம் கொடுக்காமல் கடையை உடைத்து, போதைப்பொருள் கடத்தல் இதெல்லாம் திமுகவின் சாதனைகள்.
தமிழகத்திற்கு ஊழலை அறிமுகப் படுத்திய திமுக, செய்யாத முறைகேடுகளும் இல்லை, கொள்ளைகளும் இல்லை, நில அபகரிப்புகளும் இல்லை.
இந்த வரிசையில் திமுகவின் லேட்டஸ்ட் சாதனையாக வெளிச்சத்துக்கு வந்திருப்பது, மணல் கொள்ளை.
மணல் கொள்ளை மூலம், கூலித்தொழிலாளி திமுக உடன் பிறப்பு ஒருவர், கார், டிப்பர் லாரிகள், வேன்கள் என கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாக உயர்ந்த சாதனை, திருச்சியில் நடந்துள்ளது.
தமிழகம் முழுவதும் மணல் கடத்தலில் பல திமுக உடன்பிறப்புகள் ஈடுபட்டு கோடி கோடியாக சம்பாதித்தாலும் சாமர்தியமாக தப்பித்து வருகின்றனர். அந்த வரிசையில் இதுவரை தப்பிவந்த திருச்சி திமுக பிரமுகர் ஏவிஎம் மணி இப்போது சிக்கி உள்ளார்.
திருச்சியில் காவிரி, கொள்ளிடம், கோரையாறு உள்ளிட்ட ஆறுகளில் மணல் கொள்ளை ஏகபோகமாக நடந்து வருகிறது. ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோப்புகள் வழியாக காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்தல் தினமும் நடந்து வருகிறது.
மேலூரில் விஜி என்பவருக்கு சொந்தமான தோப்பு வழியாக காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. உடனே காவல்துறை உதவி ஆணையர் ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் அதிரடியாக களத்திற்கு விரைந்தனர்.
போலீசாரின் அதிரடி சோதனையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 லாரிகள் கையும் களவுமாக பிடிபட்டன. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். 3 மணலுடன் 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த மணல் கடத்தலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான ஏவிஎம் மணி தப்பி ஓடி விட்டார். இவர் திமுகவின் விவசாய அணி அமைப்பாளர் பதவி வகிக்கிறார். அதோடு முன்னாள் அமைச்சர் கேஎன் நேருவின் தீவிர ஆதரவாளராகவும் இருந்து வருகிறார்.
கேஎன் நேருவின் தயவால்தான் கூலிதொழியான ஏவிஎம் மணி கோடீஸ்வரர் ஆகியுள்ளார். டிப்பர் லாரிகள், வேன்கள், கார், நிலங்கள், வீடுகள் என கொடிகட்டி பறக்கிறார்.
இதில் இன்னுமொரு முக்கியமான தகவல் என்னவென்றால் மணல் கடத்தலில் ஈடுபட்டு வரும் ஏடிஎம் மணி, அதிகாரிகளுக்கு மட்டும் மாமூல் கொடுப்பதில்லை. மாறாக உள்ளூர் அதிமுகவினருக்கும் மாமூல் வெட்டி வந்துள்ளார். இதால்தான், இன்று வரை கைது செய்யப்படாமல் தப்பித்து வந்துள்ளார். ஆளுங்கட்சியாக திமுக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவரது மணல் கடத்தல் தொழில் படு ஜோராக நடந்து வந்துள்ளது. இப்போதும் அவர் மட்டும் கைதாகாமல் தப்பி உள்ளார்.
இதன் மூலம், “#மணல் கொள்ளை திமுக” என்ற புதிய கேஷ்டாக் திமுகவிற்கு கிடைத்துள்ளது.