தருமபுரியில் முனியப்பன் சுவாமி சிலைக்கு செருப்பு மாலை! இந்துக்கள் கொந்தளிப்பு; சாலை மறியல்! தி.க-வினரின் கைவரிசையா?
தருமபுரியில் முனியப்பன் சுவாமி சிலைக்கு செருப்பு மாலை! இந்துக்கள் கொந்தளிப்பு; சாலை மறியல்! தி.க-வினரின் கைவரிசையா?
By : Kathir Webdesk
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் உள்ளது கூத்தப்பாடி கிராமம். இங்கு பழமைவாய்ந்த முனியப்பன் சுவாமி கோயில் உள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ளகிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் முனியப்பன் சுவாமியை தங்கள் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
வருடந்தோறும் மழை பெய்ய வேண்டி 2 ஆயிரம் களி உருண்டைகள் படையலிட்டு முனியப்பன் சுவாமியை பொதுமக்கள் வழிபடுவது வழக்கம். அந்த வகையில்நேற்று அந்த வழிபாடு நிகழ்ச்சி நடக்க இருந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் முனியப்பன் சுவாமிக்கு பட்டை நாமம் பூசியதோடு செருப்பு மாலைஅணிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த இந்துக்கள், மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஏரியூர் - பென்னாகரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.இதைத்தொடர்ந்து பதட்டம் ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். முனியப்பன் சுவாமி சிலையை அவமதித்த நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
தி.கவினர் இந்த விஷமத்தனத்தை அரங்கேற்றினார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் பதட்டம் நீடிக்கிறது.