நேருவுக்கு அமெரிக்காவில் மரியாதையா.? பொய்க்கு 8 மணி நேரம் கூட ஆயுசு இல்லை - சுக்குநூறாக்கப்பட்ட காங்கிரஸ் தலைவரின் பதிவு.!
நேருவுக்கு அமெரிக்காவில் மரியாதையா.? பொய்க்கு 8 மணி நேரம் கூட ஆயுசு இல்லை - சுக்குநூறாக்கப்பட்ட காங்கிரஸ் தலைவரின் பதிவு.!
By : Kathir Webdesk
பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது. 50 ஆயிரம் அமெரிக்கா வாழ்இந்தியர்களுக்கு மத்தியில் உரையாற்றினார். இதனை பொறுக்க முடியாத காங்கிரஸ் தரப்பினர் போட்டிக்கு செய்கிறோம் என்று கையில் எடுத்த முயற்சி, இறுதியில் அவர்களுக்கே வினையாக முடிந்துள்ளது.
இதோ பாருங்கள், 1954ம் வருடத்திலேயே நேருவும் இந்திராவும் அமெரிக்காவில் மக்கள் வெள்ளத்தில் நீந்திச் செல்கிறார்கள் என்று ஒரு போட்டோவை ட்வீட் செய்திருந்தார் காங்கிரஸ் தலைவர் சசி தரூர்.
ஒற்றை வார்த்தையில் அந்த பொய்யை சுக்குநூறாக்கினார் மூத்த பத்திரிகையாளர் காஞ்சன் குப்தா. மாஸ்கோவில் 1956ம் வருடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று அதன் உண்மையான பின்னணியை வெட்ட வெளிச்சமாக்கி சசிதரூரின் அபாரமான கற்பனையில் உதித்த பொய்யை கிழித்தெறிந்துள்ளார் காஞ்சன் தா.
காங்கிரஸ் மூத்த தலைவர் கூட அடிப்படை fact checking இல்லாமல், அவராகவே இதனை செய்திருக்கிறார் என்பது சற்றே புதிராகத் தான் உள்ளது.