Kathir News
Begin typing your search above and press return to search.

திருவாரூர்: சதுரங்க விளையாட்டுடன் தொடர்புடைய கோயில்!

சதுரங்க விளையாட்டு தொடர்புடைய திருவாரூர் சதுர வல்லபநாதர் கோயில்.

திருவாரூர்: சதுரங்க விளையாட்டுடன் தொடர்புடைய கோயில்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  24 July 2022 1:27 AM GMT

சமீபத்தில் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. எனவே இதற்காக தமிழக அரசு சார்பில் மக்கள் சார்பிலும் பல்வேறு விளம்பர பலகைகளும் உலக அளவில் தங்களுடைய கவனத்தைச் செலுத்தி வருகிறது. சென்னையின் நேப்பியர் பலம் சதுரங்க மேடையாக அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிய இடமும் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே சதுரங்க விளையாட்டில் பெயர்போன கோவிலும் தற்போது உலக அளவில் வைரலாகி வருகிறது.


அந்தக் கோவில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள திருபுவனத்தில் பழமையான சிவன் கோவில் ஒன்று தான். கோவிலின் தெய்வமான சதுரங்க வல்லபநாதர், சதுரங்கத்தில் வல்லுனர் என்று அழைக்கப்படுகிறார். செஸ் என்பதன் தமிழ் பெயர்தான் சதுரங்கம் வெறும் சதுரங்கத்தில் பெயர் போன கடவுளின் காரணமாகவே இவர் பெயர் இவ்வாறு அழைக்கப்படுகிறது. மேலும் இந்தக் கோவிலின் முதன்மை கடவுள் சதுரங்கம் விளையாடி பார்வதியின் அவதாரத்தை திருமணம் செய்து கொள்வதாக கோவில் உருவான கதை கூறப்படுகிறது.


திருநெல்வேலியை ஆண்ட வாசுதேவன் அரசனுக்கு மகளாக பார்வதி தேவி பிறக்கிறாள். மேலும் இவர் சதுரங்க விளையாட்டில் மிகவும் வல்லவராக விளங்கியவர். தன் மகள் சதுரங்கத்தில் மேதையாக இருந்ததால், தன் மகளை விளையாட்டில் தோற்கடிப்பவருக்கு திருமணம் செய்து கொடுப்பதாக அரசன் அறிவித்திருந்தான். விளையாட்டில் அரசினை தோற்கடித்து, பின்னர் திருமணம் செய்து கொள்ள தனது மாறுவேடத்தைக் களைந்ததாகக் கூறப்படுகிறது.

Input & Image courtesy: News 18

Next Story
கதிர் தொகுப்பு
Trending News