Kathir News
Begin typing your search above and press return to search.

"டைனோசர்களை கொன்று புதைத்து நான் தான்" - சைமான் டிபுளுகு பரபரப்பு பேச்சு! #Kathirநையாண்டி

"டைனோசர்களை கொன்று புதைத்து நான் தான்" - சைமான் டிபுளுகு பரபரப்பு பேச்சு! #Kathirநையாண்டி

டைனோசர்களை கொன்று புதைத்து நான் தான் - சைமான் டிபுளுகு பரபரப்பு பேச்சு! #Kathirநையாண்டி
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Oct 2019 4:14 AM GMT


நேற்று நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த சைமான் டிபுளுகு எனும் பிரபல பேச்சாளர், டைனோசர்களை கொன்று புதைத்தது அவர்தான் என்று கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


இளைஞர்களின் கரகோஷங்களுக்கிடையே பேசிக்கொண்டிருந்தார் சைமான். அவர் கூறியதாவது, "எல்லாரும் சிறுபிள்ளைத்தனமா பேசிக்கிட்டு இருக்காங்க சொந்தங்களே. என்னமோ பத்து பேரை கொன்னுட்டா தீவிரவாதியாம். கிறுக்குத்தனமா பேசிகிட்டு. ஹெஹெஹெஹெஹெ!"


தலைமுடியை கோதிவிட்டு கையை முறுக்கி வீசி இதை சொன்னார், "ஆமா! ஆமாங்றேன்! நாங்க தீவிரவாதினே வெச்சுக்கோங்க. சும்மாவா இருந்தோம். என்ன? டைனோசர்களை கொன்று புடைச்சவன் நான். இன்னைக்கு எங்கயாச்சும் டைனோசர் தெரியுதா? ஏன்? எல்லாத்தையும் கொன்னு புதைச்சவன் யாருங்கிறேன்? ஹாஹாஹாஹா! அது நான் தான்!"


கூட்டத்தில் விசில் சத்தம் தெறிக்க, இளைஞர்களின் ஆர்ப்பரிப்பு அடங்கும்முன், மேலும் பேசினார், "டைனோசர்களோட எலும்பெல்லாம் எங்க கிடைச்சுது தெரியுமா? இந்த தமிழ் மண்ணுல தான். ஏன்? கேட்ருப்பானா எவனாச்சும்? கேட்கமாட்டான்! உங்கள அப்படியே மயக்கி வெச்சுருக்கானுங்க. ஏன்? கேட்டா அப்பறம் உனக்கு உண்மைய சொல்லி ஆகணுமே. ஆமா! சைமான் தான் எல்லா டைனோசர்களையும் கொன்னான். அவன் அத்தனை டைனோசர்களையும் கொன்னு புதைச்சது இந்த தமிழ் மண்ணுலனு சொல்லணுமே. தமிழனை வதைக்க நெனச்ச டைனோசர்களை நெருப்பு வீசி அழிச்சவன் இங்க நிக்கேன்! எஹெஹெஹெ! சொல்லுவானா? மாட்டான்!"


"நான் ஒன்னு சொல்லிக்கிடனும்! ஜுராசிக் பார்க் எடுத்த ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அதுக்கு முன்னாடி நான் எழுதின என்னோட சுயசரிதைய படிச்சதுனாலதான், அவனுக்கு அந்த படம் எடுக்கணும்னே தோணிச்சு. என்ன ஷூட்டிங் ஸ்பாட் பக்கம் வாராதேன்னு கெஞ்சுனான். ஏன்? திரும்ப அந்த கிராபிக்ஸ் டைனோசர்களை கொன்னு புதைச்சுடுவேன்னு பயம்! ஆனா, இங்க என்ன சொல்றாங்க என்ன பார்த்து? நான் பொய் சொல்றேன்னாம். நான் மென்டலாம். நீங்களே சொல்லுங்க? நான் மென்டலா? எஹெஹெஹெஹெஹெ!"


சைமானின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் கடும் தீயாக பரவியது. யூட்யூபில் அவரது இந்த பேச்சு தொடர்பான காணொளியில் தம்பிகள் வெறித்தனமாக கருத்துகளை பதிவு செய்தனர். குறிப்பாக ஒருவர், "சைமான் அண்ணனோட சுயசரிதையை நமக்கு தெரியாம மறச்சுட்டாங்க. எழுவாய் தமிழா! டைனோசரை வீழ்த்திய நம் அண்ணனின் வழியில் எழுந்து நடப்போம் தோழா!" என்று கருத்து ஒன்றினை பதிவிட்டிருந்தார்.


சைமானின் இந்த பேச்சை உன்னிப்பாக கவனித்த மேற்கத்திய விஞ்ஞானிகள், அவரை ஓர் வாழும் அற்புதம் என்று கூறியதாக, ஓர் முகநூல் பக்கம், மீம் ஒன்றினை பதிவிட்டிருந்தது. மீம்களை நாம் அதிகம் நம்புவதால், அதனை நாங்கள் அப்படியே ஏற்போம்.


குறிப்பு: இது முழுக்க கற்பனை செய்தியாகும். வாசகர்கள் இதனை நிஜ செய்தி என்று நினைத்து குழம்பக்கூடாது. எனினும் சில தமிழ் செய்தி ஊடங்கங்கள் போல் அல்லாமல், நாங்கள் இதனை குறிப்பினில் சொல்கிறோம்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News