சேலம் உருக்காலையை காப்போம்! தேசம் காப்போம்!! பாரதீய மஸ்தூர் சங்க தலைவர்கள் அறைகூவல்!!!
சேலம் உருக்காலையை காப்போம்! தேசம் காப்போம்!! பாரதீய மஸ்தூர் சங்க தலைவர்கள் அறைகூவல்!!!
By : Kathir Webdesk
சேலம் உருக்காலை,பத்ராவதி மற்றும் துர்க்காபூர் உருக்காலைகளை தனியாருக்கு விற்கக் கூடாது என்றும் அவற்றை லாபத்தில் இயக்குவதற்கு மறுசீரமைப்பு செய்திடவேண்டும் என்றும் வலியுறுத்தி செயில் (SAIL) சேர்மன் அவர்களை அகில பாரத பிஎம்எஸ் தலைவர்கள் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
செப்டம்பர் 2 முதல்
7 வரை மேற்கண்ட
மூன்று உருக்காலைகளையும் நேரில்
பார்வையிட்டு தனியார்மயத்தை தடுப்பதற்காகவும் லாபத்தில்
இயக்குவதற்காகவும் தேவையான
ஆய்வுகளை அகில பாரத பிஎம்எஸ்
தலைவர்கள் செய்தனர்.
செப்டம்பர் 3 மற்றும்
4 ஆகிய நாட்களில்
சேலம் உருக்காலைக்கு வருகை
தந்த பிஎம்எஸ்
தலைவர்கள் நிர்வாக
இயக்குனர், சேலம் பாராளுமன்ற
உறுப்பினர் மாண்புமிகு
எஸ்.ஆர்.பார்த்திபன் அவர்கள்,
அனைத்து தொழிற்சங்க
நிர்வாகிகள் ஆகியோரை
சந்தித்து ஆலையை
லாபத்தில் இயக்குவதற்கும் தனியார்மயத்தை தடுப்பதற்கும் தேவையான
ஆலோசனைகளை நடத்தினர். மூன்று
உருக்காலைகளையும் ஆய்வு
செய்த பின்னர் செயில்
சேர்மன் அவர்களை
நேரில் சந்தித்து
சேலம் உருக்காலையை
புனரமைப்பதற்கான வழிமுறைகளையும் தனியார்மய
டெண்டரை ரத்து
செய்ய வேண்டும்
என்றும் பிஎம்எஸ்
சார்பில் மனு அளித்து வலியுறுத்தினர்.