Kathir News
Begin typing your search above and press return to search.

SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை: இந்த மெசஜ் வந்தவுடன் உடனே டெலிட் பண்ணுங்க!

SBI வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் எண்ணிற்கு வரும் இந்த மெசேஜை உடனடியாக டெலிட் செய்ய வேண்டும்.

SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை: இந்த மெசஜ் வந்தவுடன் உடனே டெலிட் பண்ணுங்க!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  26 May 2022 12:22 AM GMT

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு தற்போது இந்த மாதிரி மெசேஜ், உங்களுடைய வங்கி கணக்கு பிளாக் செய்யப்பட்டு இருக்கிறது. அதனை உடனடியாக மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்று மெசேஜை டெலிட் செய்யவும் வேண்டும் என்று PIB அறிவுறுத்தியுள்ளது. இந்த மாதிரியான மெசேஜ்களை நீங்கள் ஓபன் செய்து பார்க்கும் பொழுது மோசடி நபர்களின் இலக்கில் சிக்கி பணம் அல்லது உங்களது தனிப்பட்ட விவரங்களை அவர்கள் திருட நேரிடலாம். எனவே இந்த மாதிரியான மோசடிக்காரர்கள் உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை திருடி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்று SBI தரப்பில் கூறப்பட்டுள்ளது.


மேலும் இது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை வெளியிட்டுள்ள அரசாங்க கொள்கைகள் மற்றும் திட்டங்களை கவனிக்கும் தகவல்கள் மற்றும் ஊடகங்களுக்கு வழங்கியது PIB. SBI யூஸர்கள் இந்த புதிய SMS மோசடியில் சிக்காமல் இருக்க வேண்டும் என்று எச்சரித்து உள்ளது. இது தவறான எண்களில் இருந்து வரும் இத்தகைய மெசேஜ் உங்களுக்கு நீங்கள் ரிப்ளை செய்ய வேண்டிய அவசியம் கிடையாது மேலும் அவற்றை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. எனவே இந்த குழு நம்பருக்கும் நம்முடைய தனிப்பட்ட ஈமெயில் ஐடிகள், மெஸேஜ் மற்றும் OTP விவரங்களை தெரியப்படுத்த வேண்டும் என்றும் தற்போது கூறப்பட்டு உள்ளது. மேலும் இது தொடர்பான மோசடிகளில் நீங்கள் சிக்கிக் கொண்டால் உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள மெயில் ஐடிக்கு இ-மெயில் செய்யலாம் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. உடனடியாக report.phishing@sbi.co.in என்ற இ-மெயில் ஐடி-க்கு புகாரளிக்கவும்.

Input & Image courtesy: News 18

Next Story
கதிர் தொகுப்பு
Trending News