Kathir News
Begin typing your search above and press return to search.

மருத்துவ மேற்படிப்பு முடித்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க முடியாது என மறுப்பு தெரிவிக்க முடியாது: ஹைகோர்ட் அதிரடி

மருத்துவ மேற்படிப்பு முடித்த மாணவர்களுக்கு உதவி தொகையை வழங்க மறுப்பு தெரிவிக்க முடியாது என்று மருத்துவக் கல்லூரிகளுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு தெரிவித்துள்ளது.

மருத்துவ மேற்படிப்பு முடித்த மாணவர்களுக்கு உதவித்தொகை  வழங்க முடியாது என மறுப்பு தெரிவிக்க முடியாது: ஹைகோர்ட் அதிரடி

KarthigaBy : Karthiga

  |  23 July 2023 4:00 AM GMT

மருத்துவ மேற்படிப்டிப்பின் போது மாணவர்கள் ஆற்றிய பணிக்கான உதவித்தொகை வழங்குவதற்கு மருத்துவக் கல்லூரிகள் மறுப்பு தெரிவிக்க முடியாது என்று சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அறுபடை வீடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்தில் மருத்துவமனைகளில் ஆற்றிய பணிக்கான உதவித்தொகையை வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.


இந்த வழக்குகளை 2021-ல் விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி மருத்துவ கல்லூரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து கல்வி நிறுவனங்கள் சார்பில் மேல்முறையீட்டு வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவ கல்லூரிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர்.


மாணவர்கள் தரப்பில் ஆஜராக வழக்கறிஞர்கள் உதவி தொகை வழங்க மறுக்க முடியாது என்று வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நீதிமன்ற உத்தரவின் படி கல்வி கட்டணத்தை செலுத்தியுள்ள மாணவர்கள் கூடுதல் கட்டணத்தை செலுத்தி உள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்கு உதவி தொகை வழங்க முடியாது என்று மருத்துவக் கல்லூரிகள் கூற முடியாது எனவே விதிகளின்படி ஆறு வாரங்களுக்குள் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய உதவி தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு மருத்துவ கல்லூரிகளில் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News