Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவை தற்சார்பு நாடாக மாற்ற அறிவியல் சமூகம் பாடுபட வேண்டும் -108 வது அறிவியல் மாநாட்டில் பிரதமர் மோடி

இந்தியாவை தற்சார்பு நாடாக மாற்ற நமது அறிவியல் சமூகம் பாடுபட வேண்டும் என்று நாக்பூரில் 108 வது இந்திய அறிவியல் மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசினார்.

இந்தியாவை தற்சார்பு நாடாக மாற்ற அறிவியல் சமூகம் பாடுபட வேண்டும் -108 வது அறிவியல் மாநாட்டில் பிரதமர் மோடி

KarthigaBy : Karthiga

  |  4 Jan 2023 5:45 AM GMT

இந்திய அறிவியல் மாநாடு கடந்த 1914 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் நடந்து வருகிறது. இந்த வரிசையில் 108 வது மாநாடு மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.டி.எம் பல்கலைக்கழக வழக்கத்தில் நேற்று தொடங்கியது. பெண்களுக்கு அதிகாரம் அளித்தலுடன் கூடிய நிலையான வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்ற கருப்பொருளில் மாநாடு நடைபெறுகிறது வருகிறது. ஏழாம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் நாடு முழுவதும் இருந்த விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.வெளிநாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளும் பங்கேற்றனர். இந்த நிலையில் தில்லியில் இருந்த படி காணொளி காட்சி மூலம் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-


இந்தியா அறிவியல் துறையில் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த அறிவியல் வளர்ச்சியை கொண்டு இந்தியாவை தற்சார்பு நாடாக மாற்ற வேண்டும் என்பதற்காக நமது அறிவியல் சமூகம் பாடுபட வேண்டும். அறிவியல் முயற்சிகள் ஆய்வகங்களில் இருந்து நிலத்திற்கு செல்ல வேண்டும். அப்போதுதான் அது உண்மையான பலனைத் தரும். அறிவியல் வளர்ச்சி என்பது இந்தியாவின் தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக எரிசக்தி தேவை அதிகமாக உள்ளது. இதற்காக புதிய கண்டுபிடிப்புகள் தேவை. அடுத்து 24 ஆண்டுகள் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டும். அறிவியல் மூலம் நாட்டை தன் நிறைவு கொண்டதாக மாற்றவும் அன்றாட வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வரவும் ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்.


சிறுதானியங்களின் ஆண்டாக இந்த ஆண்டை ஐ.நா சபை அறிவித்துள்ளது. இந்தியாவில் உற்பத்தியாகும் சிறுதானியங்களையும் அவற்றின் பயன்பாட்டையும் அறிவியலின் துணைகொண்டு மேம்படுத்த வேண்டும். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகமாக தொடங்கப்படும் நாடுகளின் பட்டியலில் தற்போது முதல் மூன்று இடத்துக்குள் இந்தியா வந்திருக்கிறது. கண்டுபிடிப்புகள் தொடர்பான பட்டியலில் 2015 ஆம் ஆண்டு வரை இந்தியா 81 வது இடத்தில் இருந்தது. தற்போது அதை நாற்பதாவது இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம். உலக மக்கள் தொகையில் 17 முதல் 18 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது. இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்களின் முன்னேற்றம் உலகு எழுச்சிக்கு வடிவமைக்கும். அறிவியல் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்பது மட்டும் எங்கள் சிந்தனை அல்ல. பெண்களின் பங்களிப்பால் அறிவியலை மேம்படுத்த வேண்டும் என்பது முக்கியம்.

இவ்வாறு அவர் பேசினார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News