Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் ஆயிரம் இடங்களில் இரத்த ஆறு ஓட வேண்டும்! பாகிஸ்தானின் தந்திரத்தில் சீமானிற்கு பங்கு உள்ளதா? NIA விசாரணை!!

இந்தியாவில் ஆயிரம் இடங்களில் இரத்த ஆறு ஓட வேண்டும்! பாகிஸ்தானின் தந்திரத்தில் சீமானிற்கு பங்கு உள்ளதா? NIA விசாரணை!!

இந்தியாவில் ஆயிரம் இடங்களில் இரத்த ஆறு ஓட வேண்டும்! பாகிஸ்தானின் தந்திரத்தில் சீமானிற்கு பங்கு உள்ளதா? NIA விசாரணை!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Oct 2019 7:15 AM GMT


நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் நண்பரான காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மீது தேசிய புலனாய்வு முகமை பயங்கரவாத நிதி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஆசியா ஆண்ட்ராபி மற்றும் மசரத் ஆலம் ஆகிய பிரிவினைவாதிகள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.


பயங்கரவாத நிதி வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது குற்றப்பத்திரிகை இதுவாகும். குற்றப்பத்திரிகையில், என்ஐஏ புதிய ஆவண சான்றுகளையும், மேற்கூறிய நபர்களுக்கு எதிரான டிஜிட்டல் ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளது. இந்த வழக்கில் பாகிஸ்தானை சேர்ந்த 2008 மும்பை பயங்கரவாத தாக்குதல்களின் சூத்திரதாரி ஹபீஸ் சயீத் சம்பந்தப்பட்டுள்ளார்.


இவ்வாறு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கும் காஷ்மீர் பிரிவினைவாதி நாம் தமிழர் கட்சி சீமானின் நண்பன் என்று எத்தனை பேரிற்கு தெரியும். காஷ்மீரில் பிரிவினைவாதம் பேசுபவர் யாசின் மாலிக். தமிழகத்தில் பிரிவினைவாதம் பேசுபவர் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான். இருவரின் கொள்கையும் பிரிவினைவாதம் என்பதால் இருவருக்கும் கூட்டு உள்ளது. இருவரும் ஒரே மேடையில் உரையாற்றியது இதனை உறுதிப்படுத்துகிறது.





பாகிஸ்தான் ராணுவத்தின் கோட்பாடு "ஆயிரம் வெட்டுக்களால் இந்தியாவை அறுக்க வேண்டும்" என்ற கோட்பாடாகும். இந்தியாவை நேரடி போரில் தோற்கடிக்க இயலாது என்பதால் பல இடங்களில் பிரிவினைவாதத்தை தூண்டி இந்தியாவை உடைப்பது என்பதுதான் பாக்கிஸ்தான் ராணுவத்தின் "ஆயிரம் வெட்டுக்களால் இந்தியாவை அறுக்க வேண்டும் " என்ற கோட்பாடு.


இவ்வாறு பாகிஸ்தான், காஷ்மீரில் பிரிவினைவாதத்தை தூண்டியது போல் பஞ்சாபிலும் காலிஸ்தான் பிரிவினைவாதத்தை தூண்டியது. இந்தியாவில் பிரிவினைவாதம் இருக்கும் காஷ்மீர், பஞ்சாப், வட கிழக்கு மாநிலங்கள் ஆகிய பிரிவினைவாத கும்பல்களுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளது. காஷ்மீர் பிரிவினைவாதியும் சீமானின் நண்பனான யாசின் மாலிக் பாகிஸ்தான் தூதரகம் வரை தொடர்பு வைத்துள்ளார். இந்த பிரிவினைவாதிகளுக்கு பாகிஸ்தான் நிதி அளித்து உதவுகிறது.


தமிழகத்தில் பிரிவினைவாதம் பேசும் சீமான், பாகிஸ்தானின் நண்பரான யாசின் மாலிக்குடன் தொடர்புள்ளதால், சீமானிற்கும் தமிழகத்தில் பிரிவினைவாதம் பேசவும், மற்ற மாநில மக்கள் மீது வெறுப்பை உண்டாக்கவும் பாகிஸ்தான் பெரியளவில் நிதி அளிக்கலாம் என்று கூறப்படுகிறது.  அரசிற்கு எதிராக சீமான் நடத்தும் பல போராட்டங்களுக்கு பாகிஸ்தான் நிதி அளிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. யாசின் மாலிக்கை போல் சீமான் மீதும் இந்த விஷயத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எதிர்காலத்தில் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.


யாசின் மாலிக்கிடம் தொடர்புடைய பிரிவினைவாத தலைவர்களிடம் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சீமான் பெரும் அச்சத்தில் உள்ளார்.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News