Kathir News
Begin typing your search above and press return to search.

தீவிர பாதுகாப்பு வளையத்தில் திருப்பதி - தேவஸ்தானம் கூறிய காரணம் என்ன?

திருப்பதி மலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தீவிர பாதுகாப்பு வளையத்தில் திருப்பதி - தேவஸ்தானம் கூறிய காரணம் என்ன?

Mohan RajBy : Mohan Raj

  |  29 Jun 2022 10:58 AM GMT

திருப்பதி மலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பதியில் தற்போது 24 மணி நேரமும் கேரளா கேமரா மற்றும் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறித்த காரணங்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து பேசிய தேவஸ்தான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு துறை தலைமை அதிகாரி நரசிம்ம கிஷோர் கூறியதாவது, 'ஏழுமலையான் கோவிலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து வருகிறது எனவே திருப்பதி மலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.

மேலும், 'பாதுகாப்பு காரணங்களுக்காகவும், பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும் திருப்பதி மலை முழுவதும் நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் பக்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது' என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், 'பக்தர்களின் பாதுகாப்பிற்காக திருப்பதி-திருமலை இடையே பயணிக்கும் வாகனங்களுக்கு நேர கட்டுப்பட அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது' எனவும் தெரிவித்தார்.

'திருப்பதி மலைப்பாதையில் உள்ளே நுழையும் வாகனங்கள் நம்பர் பதிவு செய்யப்பட்டு திருமலை அடைந்தவுடன் அவைகள் மீண்டும் ஸ்கேன் செய்யப்படுகின்றன. பயணத்தின் பொது குறிப்பிட்ட அந்த வாகனங்களை வேகத்தை விட அதிக வேகத்தில் சென்றால் அவை கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது' எனவும் தெரிவித்தார்.

மேலும், விதிமுறைகளை அடிப்படையில் அனைத்து வாகனங்களும் இயக்கப்படுவதாகவும். திருமலை திருப்பதி இடையே இயக்கப்படும் அரசு பேருந்துகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் எனவும் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் பணத்தை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு குண்டு தொலைக்காத கண்ணாடிகள் பொருத்தப்பட உள்ளன' எனவும் தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் ஏழுமலையானை தினசரி சராசரியாக 70 ஆயிரம் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர், எனவும் புரட்டாசி மாதத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வந்து தரிசனம் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும். புரட்டாசி மாதத்தில் நடைபெறும் கருட சேவை அன்று மூன்று லட்சத்துக்கு பக்தர்கள் வருவார்கள் எனவும், ரத சப்தமி அன்று ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதி மலைக்கு வருவார்கள் எனவும் தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source - News 18 Tamil Nadu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News