Kathir News
Begin typing your search above and press return to search.

ஐபிஸ் அதிகாரி விஜயகுமாரை தரக்குறைவாக பேசிய சீமான்! சீமானை கைது தயாரான தமிழக காவல்துறை!

ஐபிஸ் அதிகாரி விஜயகுமாரை தரக்குறைவாக பேசிய சீமான்! சீமானை கைது தயாரான தமிழக காவல்துறை!

ஐபிஸ் அதிகாரி விஜயகுமாரை தரக்குறைவாக பேசிய சீமான்! சீமானை கைது தயாரான தமிழக காவல்துறை!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Oct 2019 3:47 PM IST


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபமாக ராஜிவ் காந்தியை விடுதுளை புலிகள் கொன்றதை நியாயப்படுத்தி பேசியதாலும், அந்த கொலையை "நாங்கள்தான் செய்தோம்" என்று கூறியதாலும் பெரிய சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் இவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.




https://twitter.com/r_srinigirija/status/1184322544251199488


இதனால் பலர் சீமானை கடுமையாக கண்டித்து வருகின்றனர். சமூக வலைத்தளம் முழுவதும் ஒரு முன்னாள் பிரதமரை கொலை செய்ததை நியாயப்படுவது கேவலமாக உள்ளது என்று பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே மேடையில் சீமானின் மற்றொரு சர்ச்சை பேச்சின் காணொளியும் பரவி வருகிறது.


இப்பொழுது வீரப்பனை கொன்ற விஜயகுமாரை அவமரியாதையாக சீமான் பேசியுள்ள காணொளியும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த காணொளியில் சீமான் வீரப்பனை விஜயகுமார் ஐபிஸ் அதிகாரி கொள்ளவில்லை என்றும், இரண்டு நாட்கள் முன்பு இறந்து போன வீரப்பன் மேல் ஆட்டின் ரத்தத்தை தடவி, வீரப்பனை தான் கொன்றதாக விஜயகுமார் கூறினார் என்று பொய் பேசியதால் சீமானிற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம் அதிகரித்து வருகின்றன. இதை தவிர ஐபிஸ் அதிகாரி விஜயகுமாரை ஒழுக்கமற்ற வார்த்தைகளாலும் சீமான் திட்டியுள்ளார். இவ்வாறு சீமான் தவறான முறையில் பேசுவதும், வாக்குக்காக இளைஞர்களை தவறான முறையில் வழிநடத்துவதும் பலரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இவர் மேல் மாநில அரசும் மத்திய அரசும் கடும் நடவடிக்கை எடுப்பார்கள் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் சீமானின் பேச்சு தமிழக காவல்துறை இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீமானின் தம்பிகள் என சுற்றும் ரவுடிகளை களையெடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக காவல்துறைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News