தமிழக கோவிலில் திடீர் குண்டு வெடிப்பு - ஒருவர் பலி, நான்கு பேர் படுகாயம் : விரையும் துணை இராணுவம்.!
தமிழக கோவிலில் திடீர் குண்டு வெடிப்பு - ஒருவர் பலி, நான்கு பேர் படுகாயம் : விரையும் துணை இராணுவம்.!
By : Kathir Webdesk
விநாயகர் சதுர்த்தி மற்றும் வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்த நிலையில் தமிழகத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே கோயிலில் மர்மபொருள் வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மானமதியில் உள்ள கங்கையம்மன் கோயிலில் இளைஞர்கள் சிலர் இணைந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கோயிலின் மேல் தளத்தில் பை ஒன்று கிடப்பதை கண்ட இளைஞர்கள் அதை அப்புறப்படுத்த முயற்சித்துள்ளனர். அப்போது அதில் இருந்த மர்மப்பொருள் திடீரென வெடித்ததில் 5 இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.
செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் 5 பேரில் சூர்யா என்ற இளைஞர் மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மர்மப்பொருளுடன் பையை கோயிலில் கொண்டு வந்து வைத்தவர்கள் குறித்தும் உயிர் சேதம் ஏற்படுத்திய மர்மப்பொருள் குறித்தும் மானமதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்துக்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் கோவில் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். இதுபற்றி மானாமதி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவில் கோபுரத்தில் மர்ம பொருளை வைத்தது யார்?, கோவிலை வெடி வைத்து தகர்க்க சதி திட்டமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.படுகாயம் அடைந்தவர் களின் வீடு, சூர்யாவின் மாமா வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
விநாயகர் சதுர்த்தி மற்றும் வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்கள், தேவாலயங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த சூழ்நிலையில் திருப்போரூர் அருகே பழமையான கோவில் கோபுரத்தில் இருந்த மர்ம பொருள் வெடித்து சிதறியதில் வாலிபர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பதற்றம் அதிகரித்துள்ளதை தொடர்ந்து துணை இராணுவ படையினர் குண்டுவெடிப்பு நிகழ்த்த பகுதியில் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் தற்போது தீவிரவாதிகளை தேடும் பணி விரைவாக நடைபெற்றுவருகிறது.