Kathir News
Begin typing your search above and press return to search.

செந்தில் பாலாஜி விசாரணை விவகாரத்தில் விடாப்பிடியாக நிற்கும் அமலாக்கத்துறை - அடுத்து என்ன?

மருத்துவ சிகிச்சை காரணமாக செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்துவதில் அமலாக்கத்துறைக்கு தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் கோர்ட்டை நாட அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

செந்தில் பாலாஜி விசாரணை விவகாரத்தில் விடாப்பிடியாக நிற்கும் அமலாக்கத்துறை - அடுத்து என்ன?

KarthigaBy : Karthiga

  |  19 Jun 2023 5:15 AM GMT

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைதான செந்தில் பாலாஜியை எட்டு நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்க துறைக்கு அனுமதி அளித்து சென்னை முதன்மை செசன்சு கோர்ட் கடந்த 16 - ஆம் தேதி உத்தரவு தெரிவித்தது. கோர்ட் அலுவலர்கள் மூலம் இந்த உத்தரவு நகல் செந்தில் பாலாஜிக்கு நேரில் வழங்கப்பட்டது. அவர் கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டார். செந்தில் பாலாஜி காவலில் எடுக்கும் போது அவரிடம் என்னென்ன கேள்விகளை கேட்க வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே முடிவு செய்து கேள்விகளையும் தொகுப்பை தயார் நிலையில் வைத்திருந்தனர்.


எட்டு நாட்களில் முதல் நாளான 16 -ஆம் தேதி அவரிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. கோர்ட்டு உத்தரவு நகலை அமலாக்கத் துறையினர் பெறுவதற்கும் அந்த உத்தரவு நகலை அலுவலர்கள் செந்தில் பாலாஜியிடம் ஒப்படைத்து கையெழுத்து பெறுவதற்கும் அதன் பின்பு நீதிமன்ற காவலில் இருந்து அமலாக்கத்துறை காவலுக்கு செந்தில் பாலாஜி எடுத்துக் கொள்வதற்கும் இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டது. இதனால் அன்றைய தினம் செந்தில் பாலாஜினிடம் எந்தவித விசாரணையும் நடத்தப்படவில்லை.


அமலாக்க துறை விசாரணையின் போது மருத்துவ சிகிச்சைக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என கோர்ட் நிபந்தனை விதித்துள்ள நிலையில் செந்தில் பாலாஜியை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருவதால் அவரிடம் விசாரணை நடத்துவதில் அமலாக்கத்துறைக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் கோர்ட்டை நாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறி அமலாக்கத்துறை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-


செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருக்கும் போதே காவலில் எடுத்து விசாரிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தான் செந்தில் பாலாஜி மருத்துவ சிகிச்சையில் இருந்த போதும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தோம் .மருத்துவ சிகிச்சைக்கு இடையூறு இல்லாமல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோர்ட்டு நிபந்தனை விதித்துள்ளதால், செந்தில் பாலாஜி தரப்பை இதையே ஒரு காரணமாக கூறி வருவதால் விசாரணை தள்ளிப்போகிறது. இதனால் கோர்ட்டு அனுமதி அளித்த எட்டு நாட்களில் ஒவ்வொரு நாளும் அவரிடம் எவ்வளவு நேரம் விசாரணை நடத்தப்பட்டது அவர் எவ்வளவு நேரம் மருத்துவ சிகிச்சையில் இருந்தார் என்பது போன்ற விவரங்களை தயாரித்து வருகிறோம்.


அடுத்த கட்டமாக அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. அப்படி என்றால் இருதய அறுவை சிகிச்சை முடிந்து அவர் சகஜ நிலைக்கு திரும்பும் வரை அவரிடம் விசாரணை நடத்த முடியாது. செந்தில் பாலாஜி மீதான வழக்கு தொடர்பாக நாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அவர் அளிக்கும் பதில் மூலமும் அதன் அடிப்படையில் கிடைக்கும் சான்று ஆவணங்கள் மூலமும் தான் கோர்ட்டில் செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியும் .


எனவே தற்போதைக்கு கோர்ட் அளித்த எட்டு நாட்கள் விசாரணைக்கு மருத்துவ சிகிச்சை காரணங்களை கூறி செந்தில் பாலாஜி ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றாலும் அவரிடம் எத்தனை நாட்கள் மட்டும் முழுமையாக விசாரணை நடத்த முடிந்தது? அவர் மருத்துவ சிகிச்சையில் இருந்த நாட்கள் எத்தனை? என்பது எல்லாம் பட்டியலிட்டு கோர்ட்டில் மீண்டும் முறையிட முடிவு செய்துள்ளோம்.


ஏற்கனவே கோர்ட் அளித்த எட்டு நாட்கள் பூர்த்தியாகும் வகையில் அவரிடம் விசாரணை நடத்துவதற்கு வசதியாக தேவையான நாட்களை கோர்ட்டு மூலம் பெறுவதற்கு முடிவு செய்துள்ளோம். இதய அறுவை சிகிச்சைக்கு பின்பு ஒருவேளை எங்களது கேள்விகளுக்கு செந்தில் பாலாஜி பதில் அளிப்பாரேயானால் அத்தோடு விசாரணையை முடித்துக் கொள்வோம். இல்லாத பட்சத்தில் எத்தனை நாட்கள் எங்களால் விசாரணை நடத்த முடியவில்லையோ அதனை சுட்டிக்காட்டி முறையிட்டு உரிய உத்தரவை பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News