தென் கொரிய சபையில் எதிரொலித்த தமிழனின் குரல் - திருக்குறளின் தொன்மையை கூறி கொரியர்களை பிரம்மிக்கச் செய்த தமிழக பா.ஜ.க செய்திதொடர்பாளர் SG சூர்யா.!
தென் கொரிய சபையில் எதிரொலித்த தமிழனின் குரல் - திருக்குறளின் தொன்மையை கூறி கொரியர்களை பிரம்மிக்கச் செய்த தமிழக பா.ஜ.க செய்திதொடர்பாளர் SG சூர்யா.!
By : Kathir Webdesk
இந்தியாவில் இருந்து தென் கொரியாவுக்கு சென்றுள்ள இந்திய இளைஞர் குழுவில் வளர்ந்து வரும் “இளம் தலைவராக” தேர்ந்தெடுக்கப்பட்டு பா.ஜ.க செய்திதொடர்பாளரும், தமிழக இளைஞரணி துணைத்தலைவருமான SG சூர்யா சென்றுள்ளார்.
பத்து நாட்கள் அரசு முறை பயணமாக தென் கொரிய நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில், பயண திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று(20.11.2019) தென் கொரிய நாட்டின் பூசான் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைதி நினைவு மண்டபத்திற்கு (United Nations Peace Memorial Hall) தன் இந்திய குழுவுடன் சென்ற SG சூர்யா அங்கு அதிகாரிகளுக்கு திருவள்ளுவர் திரு உருவ படத்தை அன்பளிப்பாக அளித்தார்.
இவ்வுலகில் அகிம்சையை குறித்து முதன்முதலில் எழுதப்பட்ட நூல் திருக்குறள் எனவும், இவ்வுலகிலேயே தொன்மையான மொழி தமிழ் எனவும் கூறிய SG சூர்யா, திருக்குறளில் அகிம்சையை எடுத்துரைக்கும் 311-வது குறளை தமிழிலும், ஆங்கில மொழிப்பெயர்ப்பையும் சபையில் படித்துக் காட்டினார்.