Kathir News
Begin typing your search above and press return to search.

மோடியை பாராட்டிய ஷாருக்கான் மற்றும் அமீர்கான்!

மோடியை பாராட்டிய ஷாருக்கான் மற்றும் அமீர்கான்!

மோடியை பாராட்டிய ஷாருக்கான் மற்றும் அமீர்கான்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Oct 2019 6:33 AM GMT


மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தின கொண்டாட்டம் குறித்து திரைப்பட மற்றும் பொழுதுபோக்கு துறையை சேர்ந்தோருடன் டெல்லியில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பிரபல இந்தி நடிகர்கள் அமீர்கான், ஷாருக்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, படைப்பாற்றல் சக்தி அளப்பறியது என்றும், நமது நாட்டின் நலனுக்காக அது பயன்படுத்தப்படுவது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.


மகாத்மா காந்தியின் போதனைகளை பரப்பும் விவகாரத்தில் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி துறையை சேர்ந்த பலர் சிறப்பாக பணியாற்றி இருப்பதாகவும் மோடி தெரிவித்தார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ChangeWithin என்ற ஹெஸ்டக்கில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.


நடிகர் அமீர்கான் கூறுகையில், முதல் மற்றும் முக்கியமாக, இந்த முயற்சியைப் பற்றி சிந்தித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடியை நான் பாராட்ட விரும்புகிறேன். மகாத்மா காந்தியின் போதனைகளை பரப்ப எடுக்கும் நடவடிக்கைகளுக்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிப்பதாக கூறினார். படைப்பாற்றல் நபர்களாகிய நாம் செய்யக்கூடியவை ஏராளம். மேலும், நாங்கள் இன்னும் அதிகமாக செய்வோம் என்று பிரதமருக்கு உறுதியளிக்கிறேன் என்றார்.


நடிகர் ஷாருக்கான் கூறுகையில், எங்கள் அனைவரையும் ஒன்றிணைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன், இந்தியாவுக்கும், உலகுக்கும் காந்தியை மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என தாம் நினைப்பதாக குறிப்பிட்டார்.




https://twitter.com/iamsrk/status/1185582742349611013?s=19

Next Story
கதிர் தொகுப்பு
Trending News