Kathir News
Begin typing your search above and press return to search.

மஹாபாரத சகுனிக்கும் கோவில் உண்டு எங்கே? ஏன்?

மஹாபாரத சகுனிக்கும் கோவில் உண்டு எங்கே? ஏன்?

மஹாபாரத சகுனிக்கும் கோவில் உண்டு  எங்கே? ஏன்?
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Feb 2020 7:44 AM IST

மஹாபாரம் என்பது நம் பாரதத்தின் ஒப்பற்ற காப்பியம். தலைமுறைகள் தாண்டி நிற்கும் தலைச்சிறந்த ஓர் படைப்பு. இதில் மஹாபாரம் என்றாலே கிருஷ்ணன், அர்ஜூனன், பஞ்ச பாண்டவர்கள், துரியோதனன், கர்ணன் இவர்களை குறித்து பல கதைகள், போதனைகள் சொல்லப்படுவதுண்டு. கதையின் நாயகர்கள் குறித்து பேசப்படும் அதே வேளையில் நம் காப்பியங்களில் வரும் எதிரிகளும் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு இடாய் அவர்களும் பலம் மிக்கவர்களாகவே இருந்திருக்கின்றனர். அந்த வகையில் சகுனி குறித்து மஹாபாரதம் சொல்லும் சில அரிய தகவல்கள் இங்கே

அஸ்தினாபுரத்தின் ராணி காந்தாரியின் சகோதரர் சகுனி. நடந்து முடிந்த பாரத போருக்கு மூளையாக இருந்தவர் சகுனி. உலகில் இருந்த மனிதர்களிலேயே மிகுந்த அறிவாற்றலும், புத்தி கூர்மையும் கொண்டவர் சகுனி என சொல்லப்படுகிறது.

சகோதரியின் மீது கொண்ட அளவு கடந்த பாசத்தினால் தன் வாழ்க்கையையே அர்பணித்தவர்.

உண்மையில் சகுனியின் கோபம் என்பது பாண்டவர்கள் மீது அல்ல, இருளை கண்டு அஞ்சுகிற தன் தங்கைக்கு கண் பார்வை அற்ற வரனை அமைத்த பீஷ்மர் மீதே அவர் முதல் கோபம் பதிந்துள்ளது.

எப்போதும் அஸ்தினாபுரத்திலே இருப்பதாக காட்டபடும் சகுனிக்கு இரு மகன்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. உலுக்கா மற்றும் விரிக்காசூர் என்பது அவர்களின் பெயர்.

சகுனியின் மற்றொரு பெயராக அவரின் தந்தையின் பெயரான சவுபாலா என்ற பெயராலேயும் அழைக்கப்பட்டுள்ளார்.

சகுனி பெரும் சிவன் பக்தராக இருந்தாராம். இவையனைத்தையும் விட மிக சுவாரஸ்யமான விஷயம் சகுனி கேரள மாநிலத்தில் ஒரு கோவில் உண்டு. அவர் மஹாபாரதத்தில் ஒரு எதிர்மறை கதாபாத்திரமாக சொல்லப்பட்டாலும் சில அடிப்படை நற்குணங்களும் அவரிடம் இருந்தே உள்ளன. அந்த நற்பண்புகள் கேரளா பகுதியில் கொல்லம் மாவட்டத்தில்உள்ள குறிப்பிட்ட இனத்தவரால் அங்கீகரிக்கப்படுகிறது. பவித்ரேஸ்வரம் என்று சொல்லப்படும் பழங்கால கோவிலே அது. அந்த கோவிலில் ஒரு அரியணை இன்றும் உண்டு. இது சகுனி பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது .

நல்லவர் கெட்டவர் என்ற பிம்பங்களை தாண்டி. நல்ல குணங்கள் அனைவரிடம் உண்டு. எப்போதும் நேர்மறை சிந்தனைகளை, நல்ல குணங்களை மட்டுமே போற்றுவோம் என்பதே தார்பரியம்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News