Kathir News
Begin typing your search above and press return to search.

அட்லாண்டிக் - பசிபிக் பெருங்கடலை தனியாக விமானத்தில் கடந்த முதல் சாதனை பெண்

உலகின் மிகப்பெரிய கடல்களான பசுபிக் மற்றும் அட்லாண்டிக் ஆகிய இரு கடல்களை தனி விமானத்தில் பறந்து கடந்து இருக்கிறார் ஆரோஹி என்ற சாதனை பெண்.

அட்லாண்டிக் - பசிபிக் பெருங்கடலை தனியாக விமானத்தில் கடந்த முதல் சாதனை பெண்

KarthigaBy : Karthiga

  |  22 April 2023 6:00 AM GMT

உலகின் மிகப்பெரிய கடல்களான பசுபிக் மற்றும் அட்லாண்டிக் ஆகிய இரு கடல்களை தனி விமானத்தில் பறந்து பறந்து கடந்து இருக்கும் ஆரோஹி என்ற சாதனை பெண் இது பற்றி அவரிடம் கேட்டபோது கூறியதாவது:-


எனக்கு உலகின் மிகப்பெரிய கடலான பசுபிக்கை கடக்கத்தான் ஆசை .ஆனால் அதற்கு முன்பாக உலகின் இரண்டாவது பெரிய கடலான அட்லாண்டிக் கடலை கடக்க ஆசைப்பட்டேன். அதன்படி 2019 ஆம் ஆண்டு சுமார் பத்து கோடி சதுரகிரி கிலோமீட்டர் இந்த கடலை சிறு விமானத்தில் கடக்க தயாராகினேன். கேட்பதற்கு வேண்டுமானால் இந்த செய்தி சாதரணமாக தெரியலாம். ஆனால் அட்லாண்டி கடல் ஆனது பூமியின் 20% நிலப்பரப்பையும் 29% நீர்ப்பரப்பையும் தன்னகத்தை கொண்டது.


ஐரோப்பா, ஆப்ரிக்கா அமெரிக்காவின் அரணாக இருப்பதே அட்லாண்டிக் கடல்தான். கப்பல் மூலம் இந்த கடலை ஒரு சுற்று சுற்றிவர ஒரு யுகமே தேவை கடலுக்குள் கப்பலில் பயணிப்பது என்பது ஒரு தனி அனுபவம் என்றால் கடலின் மேற்பரப்பில் ஒரு குட்டி விமானத்தில் பறப்பது பேரனுபவம். கடினமான காலநிலையை தாங்கும் உடலும் , மன உறுதியும் , விமானத்தை திறமையாக ஓட்டும் திறனும் அதனுடன் சாகசத்தின் மீது தீராத வேட்கையும் இருந்தால் மட்டுமே கடலின் மேற்பரப்பில் விமானத்தை இயக்கி இந்த பேரனுபவத்தை தன்வசமாக்க முடியும்.


அதிர்ஷ்டவசமாக இவை அனைத்தும் எனக்குள் இருந்தன என்கிறார் ஆரோஹி. மும்பையைச் சேர்ந்த இளம் பெண்ணான இவர் சாகசத்தின் மீது தீராத காதல் கொண்டவர். திறமையான விமானி அதனால்தான் 2019 ஆம் ஆண்டு மே மாதம் குறைந்த எடையுள்ள ஒரு குட்டி விமானத்தின் மூலம் அட்லாண்டிக் கடலை கடந்தார. அதுவும் தனியாக உலகிலேயே முதல்முறையாக ஒரு பெண் அட்லாண்டிக் கடலை விமானத்தின் மூலம் கடப்பது வரலாற்றில் இதுவே முதல்முறை. பல்வேறு தரப்புகளில் இருந்தும் ஆரோஹிக்கு பாராட்டுக்கள் குவிந்தன.


அதையெல்லாம் பொருள்படுத்தாத ஆரோஹிஅடுத்தகட்ட சாகச பயணத்திற்கு தயாரானார். இம்முறை உலகின் மிகப்பெரிய கடலான பசிபிக் கடலை கடப்பது என முடிவு செய்தார். சமீபத்தில் பசிபிக் பெருங்கடலையும் குட்டி விமானத்தில் கடந்து அட்லாண்டிக் மற்றும் பசிபிக்கை விமானத்தில் தனியாக கடந்த முதல் சாதனைப் பெண் என்ற பட்டத்தையும் தன்வசம் ஆக்கிவிட்டார். 25 வயது உடைய இளம் பெண்ணான ஆரோஹி "கடலின் மீது விமானத்தில் பறக்கும் போது இயற்கை எவ்வளவு ஆச்சரியமானது என்பதை துல்லியமாக உணர முடியும். கடலில் முன்பு நானும் விமானமும் ஒரு தூசி என்பதே உணர்ந்தேன். சில இடங்களை கடக்கும் போது இந்த உலகில் எவ்வளவு அழகான இடங்களும் இருக்கின்றனவா என்று வியந்தேன்" என்று கூறுகிறார்.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News