மகாராஷ்ட்ராவில் கிச்சடி அரசியல்! இந்துத்வாவை கைவிட்டால் சிவசேனா இன்னும் ஒரு வருடத்தில் விளங்காமல் போய்விடும் - சுப்ரமண்ய சுவாமி சாபம்!
மகாராஷ்ட்ராவில் கிச்சடி அரசியல்! இந்துத்வாவை கைவிட்டால் சிவசேனா இன்னும் ஒரு வருடத்தில் விளங்காமல் போய்விடும் - சுப்ரமண்ய சுவாமி சாபம்!
By : Kathir Webdesk
மகாராஷ்ட்ராவில் தனது மகனை முதல்வராக முன்னிறுத்தி சிவசேனா கட்சி மறைமுகமாக அரசியல் செய்து வருகிறது, கொள்கை ரீதியாக இது பிடிக்காத பாஜக சிவசேனாவின் எந்த கோரிக்கையையும் ஏற்க முன் வராத நிலையில் சிவசேனா இது வரை தான் கடைப்பிடித்து வந்த இந்துத்வா மற்றும் மகாரஷ்டிரர் நலன்கள் கொள்கைகளை கைவிட்டு தங்களது கொள்கைகளுக்கு நேரிடையான எதிரிகளான சரத்பவாரின் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் உதவியைக் கோரி அங்கு ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறது.
இது தொடர்பாக சரத்பவார் மற்றும் சோனியாவுக்கு ஆட்களை அனுப்பி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் சரத் பவாரின் தேசிய காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகள் 3 ம் ஓன்று சேர்ந்து மகாராஷ்டிர மக்கள் மேற்கொண்ட தேர்தல் முடிவுகளுக்கெதிராக கூட்டணி அமைக்க பேரம் பேசி முடிவு செய்து கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உதவி கோரப் போவதாக செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளன.
இது குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி கூறுகையில்” கொள்கைக்கு பொருந்தாத இந்த 3 கட்சி கூட்டணி ஒரு கிச்சடி உப்புமா என்றும் இவர்கள் அமைக்கப்போகும் அரசு ஒரு ஆண்டுக்கு மேல் தாக்கு பிடிக்காது என்றும், இந்த அற்ப ஆசைக்காக சிவசேனா கட்சி தனது இந்துத்வா கொள்கைகளை கைவிட்டு வருவது சரியா எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும் தற்காலிக முதல்வர் பதவிக்காக சிவசேனா தனது இந்துத்வா கொள்கையை இழப்பதன் மூலம் அது இனிமேல் உருப்படாது என்றும், பாஜகவை கைவிட்டது முட்டாள் தனமானது என்றும் புருஷனை கைவிட்டு போலி அரசனுடன் கைப்பிடிப்பதற்கு இது சமமாகும் என்றும் கூறியுள்ளார்.