Kathir News
Begin typing your search above and press return to search.

விவசாய தொழிலாளிக்கு ஷாக் அடித்த மின் கட்டணம் - 2.26 லட்சம் பில்! மின் துறையின் அலட்சியம்

விவசாயக் கூலித் தொழிலாளிக்கு 2.26 லட்சம் ரூபாய் மின்சார கட்டணமாக வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவசாய தொழிலாளிக்கு ஷாக் அடித்த மின் கட்டணம் - 2.26 லட்சம் பில்! மின் துறையின் அலட்சியம்

Mohan RajBy : Mohan Raj

  |  8 Oct 2022 1:30 PM GMT

விவசாயக் கூலித் தொழிலாளிக்கு 2.26 லட்சம் ரூபாய் மின்சார கட்டணமாக வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை ஊராட்சியை சேர்ந்தவர் சகாய ஆரோக்கியா பெனிட், வெற்றிலை கொடிக்கால் பறிக்கும் கூலி வேலை செய்து வருகிறார். இவரது வீட்டின் கடந்த இரண்டு மாத மின் கட்டணத்தை ரெகுநாதபுரம் மின் கணக்கீட்டாளர்கள் கணக்கீடு செய்து விட்டு சென்றிருக்கின்றனர்.

இந்நிலையில் அவரது செல்போனிற்கு இரண்டு மாதங்களுக்கான மின் கட்டணம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 564 என குறுஞ்செய்தி வந்துள்ளது. பின்னர் சந்தேகம் அடைந்தவர் ஆன்லைனில் மின்கட்டணம் குறித்து பார்த்துள்ளார். அதிலும் அதே கட்டணம் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து ராமநாதபுரம் துறை மின் நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக சகாய ஆரோக்கிய பணியிடம் கேட்டபோது நடுத்தர வீடுகளில் பயன்படுத்தப்படும் மின் சாதனங்களை தான் பயன்படுத்தி வருகிறோம். 350 முதல் 400 வரை தான் மின்கட்டணமாக வரும் ஆனால் இந்த முறை பார்த்தால் 2.26 லட்சம் மின்கட்டணம் என வந்ததை பார்த்து என் இதயமே நின்றுவிட்டது. இது குறித்து துணை மின் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர் என கூறினார்.

இந்நிலையில் முத்துப்பேட்டை ஊராட்சிக்கு மின் கணக்கீட்டாளர்கள் கடந்த எட்டு மாதங்களாக மின்கட்டணம் கணக்கீடு செய்ய சரிவர வருவதில்லை என ரகுநாதபுரம் துணை மின் நிலைய உதவி பொறியாளரிடம் கிராம மக்கள் புகார் மனு அளித்துள்ளனர். இதுவரை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் துறையின் மின் நிலைய அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் முத்துப்பேட்டை ஊராட்சியில் பேனர் வைத்துள்ளனர். இந்த விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News