குழந்தைகளையாவது எடுத்து செல்லுங்கள் !அமெரிக்க வீரர்களிடம் கெஞ்சும் ஆப்கான் தாய்மார்கள் !
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப்படைகள் வாபஸ் பெற்றதை தொடர்ந்து அந்நாட்டில் தாலிபான் தீவிரவாதிகள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இந்த நிகழ்வு உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
By : Thangavelu
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப்படைகள் வாபஸ் பெற்றதை தொடர்ந்து அந்நாட்டில் தாலிபான் தீவிரவாதிகள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இந்த நிகழ்வு உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதனிடையே புதிய அதிபர் மற்றும் அரசை நிர்ணயம் செய்வதற்கு தாலிபான் தலைவர்கள் கூட்டம் நடத்தி வருகின்றனர். விரைவில் இதற்கான முடிவுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஆட்சி அமையும் பட்சத்தில் அது ஷரியத் சட்டப்படி நடத்தப்படும் என தாலிபான்கள் கூறியுள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் வெளிநாட்டிற்கு தப்பித்து செல்வதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி காபூல் விமான நிலையத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் காத்திருப்பதாக அமெரிக்க கூறியுள்ளது.
இந்நிலையில், ஆப்கானில் இருந்து தப்பிச் செல்ல முடியாதவர்கள், தங்களின் குழந்தைகளாவது உயிர் பிழைக்கட்டும் என அமெரிக்க ராணுவத்தினரிடமும், தப்பிச்செல்லும் நபர்களிடமும் தங்களின் குழந்தைகளை பெற்றோர்கள் கொடுத்து அனுப்புகின்றனர்.
ஆனால் அது போன்று அழைத்துச் செல்வதற்கு தங்களுக்கு உரிமை இல்லை என்று வீரர்கள் கண்கலங்கியவாறு தாய்மார்களிடமே குழந்தைகளை கொடுத்துவிட்டு செல்கின்றனர். இது பற்றிய காணொளிகள் வெளியாகி பெண்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Source: Daily Thanthi
Image Courtesy: Dailythanthi
https://www.dailythanthi.com/News/TopNews/2021/08/20110710/SHOCKING-video-shows-Afghan-moms-throwing-kids-over.vpf