அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்டும் அறக்கட்டளையில் முக்கிய பதவிகள் வேண்டும்! நிர்மோஹி அகாரா அமைப்பினர் பிரதமரை வலியுறுத்த முடிவு!
அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்டும் அறக்கட்டளையில் முக்கிய பதவிகள் வேண்டும்! நிர்மோஹி அகாரா அமைப்பினர் பிரதமரை வலியுறுத்த முடிவு!
By : Kathir Webdesk
அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம், அதற்கான பணிக்களை மேற்கொள்ள மூன்று மாதங்களுக்குள் அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
மேலும் அப்போது சர்ச்சைக்குரிய நிலத்தில் உரிமை கோரி வழக்கு தொடர்ந்திருந்த முஸ்லிம் வக்பு வாரிய மனுவையும், நிர்மோஹி அகாரா அமைப்பின் மனுவையும் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் உரிமை கொண்டாடிய ராம்லல்லா இயக்கத்தின் கோரிக்கை மட்டுமே செல்லுபடியாகும் எனவும் அறிவித்திருந்தது. அதே சமயம் ராமர் கோவில் கட்டும் நிர்வாக பொறுப்புகளில் நிர்மோஹி அகாரா அமைப்புக்கு அரசு விரும்பினால் பொறுப்பு வழங்கலாம் எனவும் தீர்ப்பளித்தனர்.
இந்த நிலையில், முக்கிய மனுதாரர்களில் ஒன்றான நிர்மோஹி அகாரா அமைப்பினர் பங்கேற்ற உயர்நிலை கூட்டம் நேற்று அயோத்தியில் நடைபெற்றது. அப்போது, அறக்கட்டளையின் தலைவர் அல்லது செயலாளர் பதவியை தங்களுக்கு அளிக்க வலியுறுத்தி பிரதமரை சந்திக்க முடிவு செய்யப்பட்டது.
நிர்மோஹி அகாரா அமைப்பினர் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் இராமர் கோவில் விவகாரங்களில் அதிகம் தலையிடுவதை விரும்பாதவர்கள் என கூறப்படுகிறது, மேலும் விஸ்வ ஹிந்து பரிஷத் தயாரித்து அளித்துள்ள இராமர் கோவில் கட்டுமான வரைபடத்துக்கு இவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Source:- NEWS18