Begin typing your search above and press return to search.
சிபிராஜ் நடிக்கும் புதிய படம் “ரேஞ்சர் “!!
சிபிராஜ் நடிக்கும் புதிய படம் “ரேஞ்சர் “!!
By : Kathir Webdesk
ஆரா சினிமாஸ் மகேஷ் ஜி தயாரிப்பில் சிபிராஜ் நடிக்கும் படம் “ரேஞ்சர்” இப்படத்தின் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் யாவாத்மல் எனும் மாவட்டதில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் படம் .
“பர்மா” , “ராஜா ரங்குஷ்கி” “ஜாக்சன் துரை “ போன்ற படங்களை உருவாக்கிய இயக்குநர் தரணிதரன் தான் இப்படத்தை எழுதி இயக்குகிறார். சிபிராஜ் கதாநாயகனாக நடிக்கிறார், மற்றும் ரம்யா நம்பீசன், மது ஷாலினி ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களை தவிர்த்து மேலும் பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடிக்க உள்ளார்கள்.
இசையமைப்பாளர் அரோல் கரோலி இப்படத்திற்கு இசையமைக்கிறார். கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு , சிவா நந்தீஸ்வரன் எடிட்டிங் செய்கிறார்.
Next Story