சீக்கிய மதகுரு மகளை கடத்தி, துப்பாக்கி முனையில் முஸ்லிமாக மதமாற்றம் செய்த கும்பல்!!
சீக்கிய மதகுரு மகளை கடத்தி, துப்பாக்கி முனையில் முஸ்லிமாக மதமாற்றம் செய்த கும்பல்!!
By : Kathir Webdesk
பாகிஸ்தானின் லாகூர் நங்கனா சாகிப் பகுதியில் உள்ள சீக்கிய குருத்வாரா தலைவரின் 19 வயது மகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு, அப்பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் சிலர் கடத்திச் சென்றுள்ளனர்.
பின்னர், கடத்தப்பட்ட சிறுமியை துப்பாக்கி முனையில் மிரட்டி கட்டாயப்படுத்தி, முஸ்லிம் மதத்திற்கு மாற்றியுள்ளனர். அதன்பிறகு முஸ்லிம் ஒருவருக்கு அந்த சிறுமியை கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர் அந்த மதவெறி கும்பல்.
இது தொடர்பாக அவரது பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதோடு சிறுமியின் பெற்றோர், சிறுமியை விடுதலை செய்யாவிட்டால் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் கவர்னரின் இல்லத்தின் முன்பு தீக்குளிக்கப் போவதாக கூறி உள்ளனர்.
இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆகியோருக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை வாபஸ் பெறும்படி அந்த முஸ்லிம் கும்பல் அந்த சிறுமியின் பெற்றோரை மிரட்டுவருகிறது.
இந்த சம்பவம் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையான சீக்கியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சீக்கிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழு தலைவரும், ஷிரோமணி அகாலி தளம் எம்எல்ஏவுமான மஞ்சிந்தர் சிங் சிர்சாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் சிர்சா கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் சிறுபான்மையாக உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவ பெண்களை கடத்தி, கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து, முஸ்லிம் ஆண்களுக்கு திருமணம் செய்து வைப்பது தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.