ரொம்ப சிம்பிளான இந்த விஷயங்களை செய்தால் சிறப்பான வாழ்க்கை நிச்சயம்.!
ரொம்ப சிம்பிளான இந்த விஷயங்களை செய்தால் சிறப்பான வாழ்க்கை நிச்சயம்.!

எண்ணிலடங்கா ஆசைகள் நிறைந்த அன்றாட வாழ்வில் ஒன்றை தேர்வு செய்யுங்கள். அதை இன்றே துவங்குங்கள். அதை தினசரி தொடருங்கள்.
இந்த கட்டுரையை படிக்கிறீர்களா…? உங்கள் அலைபேசியை தள்ளி வையுங்கள் மற்ற அனைத்திலுமிருந்து உங்களை துண்டித்து கொள்ளுங்கள். இந்த கட்டுரையோடு மட்டுமே ஒன்றியிருங்கள். நீங்கள் நடைபயிற்சிக்கு செல்ல வேண்டுமா உங்கள் காதுகளில் தொங்கும் ஹெட்போன்களுக்கு விடுப்பு கொடுங்கள். 'இயற்கை, நீங்கள் உங்கள் நடைபயிற்சி' உங்கள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு இந்த மூன்றும் மட்டும் போதுமானது மற்ற அனைத்தையும் தூர வையுங்கள். இது எல்லா செயல்களுக்கும் பொருந்து.
இது மிகவும் எளிமையான சிந்தனை ஆனால் நடைமுறைப்படுத்தி அதனால் கிடைக்கும் பலன்களின் தாக்கம் அலப்பரியாதது.
சிறு இடைவேளைகளில் ஒரு குட்டி தியானத்தை மேற்கொள்ளுங்கள்.
நீங்கள் ஒரு வேலையை செய்து முடித்தவுடன் அடுத்த வேலைக்கு பறந்து செல்ல எத்தனிக்காதீர்கள். நீங்கள் செய்து முடித்த தருணத்திற்க்கும் அடுத்த துவங்கவிருக்கும் வேலைக்கும் இடையே இருக்கும் சில நொடிகளை, நிமிடங்களை மனதார ரசித்து மகிழுங்கள். நீங்கள் எதை செய்தீர்கள், எப்படி செய்தீர்கள், இந்த செயலை செய்வதற்கான நோக்கம் என அனைத்தையும் குறித்து எண்ணி மகிழுங்கள். அது சிறப்பாக செய்த மனநிறைவு இருந்தால் உங்களை நீங்களே தோள் தட்டுங்கள். ஏனெனில் விரைந்து கடப்பது மட்டுமல்ல வாழ்க்கை நிகழ்ந்த வெற்றிகளை ரசித்து அனுபவிப்பது மிக முக்கியம்.
சில பொறுப்புகளை விட்டு கொடுங்கள். நம் வாழ்வு நிரம்பி வழிகிறது நாம் ஒப்புகொண்ட பொறுப்புகளால். நாம் வாழ்வை சில பொறுப்பகளை விட்டுகொடுப்பதால் கூட எளிமை படுத்தலாம். 'இன்று, இதற்கு என் வாழ்வில் நேரமும் இடமுமில்லை' என்று மிக மிருதுவாக தெரிவிக்கலாம். "முடியாது" என்பதை மிகுந்த அன்புடனும் உறுதியுடனும் சொல்ல பழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.
எதோவொன்றை சுத்தப்படுத்துங்கள். உங்கள் வீட்டில், அறையில், ஜன்னலில், அலுவலகத்தில் அல்லது உங்கள் மேஜையில் ஏதோவொரு சிறு இடத்தை தேர்வு செய்யுங்கள். நிச்சயம் வேண்டாத சிலவை இருக்கும் அதை அப்புறப்படுத்துங்கள். அந்த சுத்தம் நிச்சயம் ஒருவித புத்துணர்ச்சியை, மன அமைதியை உங்களுக்கு கொடுக்கும்.
இவையெல்லாம் சின்ன சின்ன யோசனைகள் நம் வாழ்வை எளிமையாக்க. உங்களுடைய உடமைகளை, உங்கள் தினத்தை, உங்கள் பொருளாதார திட்டத்தை, என எதையும் எளிமையாக நீங்கள் முனையலாம்.
உங்கள் வெற்றி பாதையை எளிமையாக்க "எளிமைப்படுத்தப்பட்ட உங்கள் வாழ்வுக்கு" பெரும் பங்கு உண்டு என்பதை நம்புங்கள்.
வாழ்க்கை எளிமையானது மட்டுமல்ல எழிலானதும் கூட!!