பாட்மின்டனில் வரலாறு படைத்த தங்க மங்கை சிந்து! தங்கம் வென்று சாதனை படைத்த முதல் இந்தியர்!
பாட்மின்டனில் வரலாறு படைத்த தங்க மங்கை சிந்து! தங்கம் வென்று சாதனை படைத்த முதல் இந்தியர்!
By : Kathir Webdesk
உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் சிந்து.
சுவிட்சர்லாந்தில் உள்ள பசல் நகரில் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர்-5' வீராங்கனையான இந்தியாவின் சிந்து, 4வது இடத்தில் உள்ள ஜப்பானின் ஒகுஹராவை சந்தித்தார்.
முதல் செட்டை 21-7 எனக் கைப்பற்றிய சிந்து, 2வது செட்டை 21-7 என தன்வசப்படுத்தினார்.
மொத்தம் 36 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் சிந்து 21-7, 21-7 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 42 ஆண்டு கால உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார்.
இது தவிர, உலக பாட்மின்டனில் சிந்து கைப்பற்றிய 5வது பதக்கம். ஏற்கனவே 2 வெள்ளி (2017, 2018), 2 வெண்கலம் (2013, 2014) வென்றிருந்தார்.