முன்னாள் பிரதமர் நேரு பற்றி பிரதமர் லீ சர்ச்சை கருத்து: சிங்கப்பூர் தூதருக்கு மத்திய அரசு சம்மன்!
By : Thangavelu
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் சில நாட்களுக்கு முன்னர் அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங் பேசும்போது, இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேருவையும், தற்போதுள்ள இந்திய எம்.பி.க்கள் பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறியிருந்தார். நேருவின் இந்தியாவில் எம்.பி.க்கள் மீது குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருப்பதாக ஊடக செய்திகள் வெளியிட்டுள்ளது என குறிப்பிட்டார். இவரது கருத்து இந்திய அரசியலில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி சிங்கப்பூர் பிரதமர் பேசிய உரையை தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளார். இது பற்றி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்தியாவில் உள்ள சிங்கப்பூர் தூதர் சைமன் வாங்குக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது. இந்திய எம்.பி.க்கள் பற்றி பேசிய சிங்கப்பூர் அரசு உரிய விளக்கம் கொடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Source: Daily Thanthi
Image Courtesy: BBC