சீர்காழி:குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவு!
சீர்காழி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 நிவாரண நிதியாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
By : Bharathi Latha
சென்னையில் தற்பொழுது பழத்த மழை பெய்து வருகிறது இதன் காரணமாக வரலாறு காணாத மழை சீர்காழி மற்றும் தரங்கபாடி புறத்தில் அதிகமாக பெய்தது. எனவே சீர்காழி மற்றும் தரங்கபாடி பகுதிகளில் மக்கள் மிகவும் துயர பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு நிவாரண நிதியாக தமிழக அரசு ரூபாய் ஆயிரம் வழங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறார். கடந்த 122 ஆண்டுகள் இல்லாத வகையில் இந்த ஆண்டு சீர்காழியில் அதிக அளவில் மழை பெய்து இருப்பது தெரிய வருகிறது. எனவே இது வரலாறு காணாத மழையாகவே பார்க்கப்படுகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்ததன் காரணமாக அந்த பகுதி வெள்ள காடாக காட்சி அளித்தது. நேற்று முன்திரம் வரை திமுக தலைமையிலான அரசு இந்த ஒரு நிகழ்வை கண்டு கொள்ளவில்லை. ஆனால் பெரும்பாலான செய்திகள் நிறுவனங்கள் இதை முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளாக எழுப்புவதை தொடர்ந்து தி.மு.க அரசாங்கம் சீர்காழியில் பயணம் மேற்கொண்டு இருக்கிறது. இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சீர்காழியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
குறிப்பாக பல்வேறு விவசாய நிலங்கள் இந்த மழை காரணமாக பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. உரிய நிவாரணம் மற்றும் முதல் உதவிகள் தேவையான பகுதிகளுக்கு உடனடியாக அனுப்பப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது உறுதி அளித்து இருக்கிறார். இதை தவிர சீர்காழி மற்றும் தரங்கபாடி பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 வழங்குவதாக தமிழக அரசு உறுதி அளித்து இருக்கிறது.
Input & Image courtesy:Polimer News