Kathir News
Begin typing your search above and press return to search.

சிவகங்கைக்கு வருகிறது இடைத்தேர்தல்! வரி ஏய்ப்பு வழக்கில் கார்த்திக் சிதம்பரத்திற்கு 2 ஆண்டு ஜெயில்?

சிவகங்கைக்கு வருகிறது இடைத்தேர்தல்! வரி ஏய்ப்பு வழக்கில் கார்த்திக் சிதம்பரத்திற்கு 2 ஆண்டு ஜெயில்?

சிவகங்கைக்கு வருகிறது இடைத்தேர்தல்! வரி ஏய்ப்பு வழக்கில் கார்த்திக் சிதம்பரத்திற்கு 2 ஆண்டு ஜெயில்?
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 Sept 2019 2:38 PM IST


ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். இது ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கோ இல்லை ஏர் செல் மேக்சிஸ் வழக்கோ இல்லை இது வரி ஏய்ப்பு வழக்கு!


முட்டுக்காடு கிராமத்தில் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்திற்கு சொந்தமான 1 ஏக்கர் 16 சென்ட் நிலம் இருந்தது. இதன் பங்குதரர்களாக கார்த்திக் சிதம்பரமும் அவரது மனைவி ஸ்ரீநிதியும் இருந்தனர்.


இந்த நிலத்தை கடந்த 2015-2016 ம் ஆண்டு விற்பனை செய்தது சிதம்பரத்தின் குடும்பம். தமிழக அரசுக்கு பருப்பு முட்டை சப்ளை செய்த கிறிஸ்டி பூட் நிறுவனம் தான் சிதம்பர குடும்பத்தின் நிலத்தை வாங்கியது.


ஆனால் நேரடியாக அந்த நிலத்தை விற்பனை செய்தது போல எந்த ஆவணங்களும் இருக்க கூடாது என திட்டமிட்ட கார்த்தி சிதம்பரம் பிரபல தொழிலதிபர் ஜெய்பிரகாஷிடம் விற்பனை செய்தார்.இதற்கடுத்து இந்த நிலம் கிறிஸ்டி பூட் நிறுவனத்திற்கு கை மாற்றப்பட்டது நிலத்தை விற்பனை செய்த கார்த்திக் சிதம்பரத்திற்கு 3 கோடியே 65 லட்சம் வருமானமாக கிடைத்துள்ளது. இந்த தொகை செக் மூலம் கொடுக்கப்பட்டதால் வருமான வரித்துறையிடம் கணக்கு காட்டப்பட்டுள்ளது.


அனால் இந்த நிலம் விற்பனை செய்தத்தில் 1.35 கோடி பணமாக கைமாறியுள்ளது. கார்த்திக் சிதம்பரம் இதற்கு கணக்கும் காட்டவில்லை வரியும் கட்டாமல் வரி ஏய்ப்பு செய்துள்ளார்.


கிறிஸ்டி பூட் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 2017 ஆம் ஆண்டு அதிரடி சோதனை நடத்தப்பட்டது, அப்போது கார்த்திக் சிதம்பரத்தின் முட்டுக்காடு டாக்மென்ட் சிக்கியது. இதனையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டது அமலாக்க துறை.


இந்த நில விற்பனை தொடர்பாக தொழிலதிபர் ஜே.பி யிடம் விசாரணை செய்த போது அவர் அளித்த வாக்குமூலத்தில் 3.65 கோடி வெள்ளையாகவும் 1.35 கோடி கறுப்பு பணமாகவும் கொடுக்கப்பட்டது என கூறியுள்ளார். இதன் அடிப்படையில் கார்த்திக் சிதம்பரம் அவரது மனைவி ஸ்ரீநிதி மேல் வழக்கு பதிந்தது அமலாக்கத்துறை, இவ்வழக்கில் கார்த்திக் சிதம்பரம் தப்பிக்க முடியாது ஆதாரங்கள் ஆவணங்கள் உள்ளதாகவும் அதை நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றன அமலாக்க துறை வட்டாரங்கள்.


தற்போது கார்த்திக் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிவிட்டார். இதனால் இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது, இதை எதிர்த்து கார்த்திக் சிதம்பரம் மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி பதிவாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.


இதனையடுத்து பதிவாளர் விரிவான பதிலை தாக்கல் செய்தார். இதன் அடிப்படையில் நீதிபதி ஆதிகேசவலு கிரிமினல் வழக்கை ஒரு நீதிமன்றத்திலிருந்து வேறு நீதி மன்றத்திற்கு மாற்ற அதிகாரம் இருப்பதால் கார்த்திக் சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்தார். விரைவில் தீர்ப்பு அளிப்பதாகவும் தெரிவித்தார்.


இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் வேகம் எடுத்திருக்கிறது. வரி ஏய்ப்பு வழக்கில் கார்த்திக் சிதம்பரத்திற்கு 2 வருடங்களுக்கு அதிகமாக தண்டனை கிடைக்கும் பட்சத்தில் அவர் எம்.பி. பதவியை இழக்க நேரிடும்.


சிவகங்கை தொகுதிக்கு கண்டிப்பாக இடைத்தேர்தல் வரும் என இவ்வழக்கை தொடுத்துள்ள அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News