அரசு மருத்துவமனையில் மனைவிக்கு பிரசவம் பார்த்த சிவகங்கை நீதிபதி - குவியும் பாராட்டுக்கள்
அரசு மருத்துவமனையில் நீதிபதியின் மனைவிக்கு பிரசவம் பார்த்த சம்பவம் பரபரப்பாகி வருகிறது.
By : Mohan Raj
அரசு மருத்துவமனையில் நீதிபதியின் மனைவிக்கு பிரசவம் பார்த்த சம்பவம் பரபரப்பாகி வருகிறது.
சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சரத்ராஜின் மனைவி மைதிலிபாவிற்கு அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது.
நீதிபதி மனைவி மைதிலிப்பா நவம்பர் மாதத்தில் இருந்தே மகப்பேறு பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனையை நாடவில்லை எனவும், சிவகங்கை அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் பரிசோதனைக்குச் சென்றார் எனவும், டீன் ரேவதி மகப்பேறு துறை தலைவர் காயத்ரி நீதிபதியின் மனைவிக்கு பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினார் எனவும் கூறப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட சிவகங்கை அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் சேர்த்தனர் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. நீதிபதி சரத்ராஜ் இதன் மூலம் கூறியதாவது சிவகங்கை அரசு மருத்துவமனை பிரிவில் நான்கு கவனிக்கின்றனர் கர்ப்பிணிகளுக்கு ஏற்ப சுகாதாரத்தை பின்பற்றுகின்றனர், என் மனைவிக்கு சிகிச்சை அளித்த டீன் ரேவதி, மகப்பேறு பிரிவு தலைவர் காயத்ரி, டாக்டர் நர்ஸ் ஊழியர்களுக்கு நன்றி என்றார்.
தனியார் மருத்துவமனையை நாடாமல் நீதிபதியின் மனைவியே அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்தது பாராட்டுகளை குவித்து வருகிறது இது ஒரு சிறந்த முன்னுரை முன்னுதாரணமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.