Kathir News
Begin typing your search above and press return to search.

சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர் உட்பட ஆறு பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர் உட்பட ஆறு பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கும்பகோணம் கோர்ட் தீர்ப்பு கூறியது

சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர் உட்பட ஆறு பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

KarthigaBy : Karthiga

  |  2 Nov 2022 9:15 AM GMT

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த சுத்தமல்லி வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த 2008 ஆம் ஆண்டு 20 சாமி சிலைகள் மாயமானது. இந்த சிலைகள் மாயமானது குறித்து சுத்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் எந்தவித தகவலும் கிடைக்காததால் இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மாயமான சிலைகள் குறித்து தீவிர விசாரணையில் இறங்கினர். விசாரணையில் சுத்தமல்லி வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்த சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டது தெரியவந்தது. இந்த சிலைகள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கினர்.


இதனை தொடர்ந்து இந்த சிலைகள் கடத்தலில் ஈடுபட்டதாக சிலை கடத்தல் மன்னன் அமெரிக்காவில் வசித்து வந்த சுபாஷ் சந்திர கபூர்,சென்னையைச் சேர்ந்த சஞ்சீவி அசோகன், பாக்யகுமார், மதுரை சேர்ந்த மாரிச்சாமி, ஸ்ரீராம் என்கிற சுலோகு , பார்த்திபன் சிதம்பரத்தைச் சேர்ந்த பிச்சுமணி ஆகிய ஏழு பேரை தமிழக சிலை கடத்தல் சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் பிச்சுமணி அப்ரூவரானார். மீதமுள்ள சுபாஷ் சந்திர கபூர், சஞ்சீவி, அசோகன் மாரிசாமி, பாக்யகுமார், ஸ்ரீராம் என்கிற சுலோகு பார்த்திபன் ஆகிய ஆறு பேர் மீதான வழக்கு கும்பகோணம் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் ஒவ்வொரு கட்ட விசாரணையின் போதும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சர்வதேச சிலை கடத்தல் மன்னனான சுபாஷ் சந்திர கபூரை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி வந்தனர்.


இந்த நிலையில் இந்த வழக்கில் இறுதி கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது இதற்காக சுபாஷ் சந்திர கபூர் உட்பட ஆறு பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஏற்றுக் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். மாலையில் நீதிபதி சண்முகப்பிரியா தீர்ப்பை வாசித்தார். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்ட சுபாஷ் சந்திர கபூர், சஞ்சீவி அசோகன், பாக்யகுமார், மாரிச்சாமி, ஸ்ரீராம் என்கிற சுலோகு, பார்த்திபன் ஆக ஆறு பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் சுபாஷ் சந்திர கபூருக்கு 4 ஆயிரமும் மீதமுள்ள ஐந்து பேருக்கு தலா 8 ஆயிரமும் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News