Kathir News
Begin typing your search above and press return to search.

ஆறு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குகிறீர்களா?இந்த பதிவு உங்களுக்கு தான்

ஆறு மணி நேரத்திற்கு குறைவாக தூங்குவதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் பற்றி காண்போம்.

ஆறு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குகிறீர்களா?இந்த பதிவு உங்களுக்கு தான்

KarthigaBy : Karthiga

  |  1 Oct 2023 2:45 PM GMT

இரவில் போதுமான அளவு தூங்கா விட்டால் ஏற்படும் சோர்வு மறுநாள் முழுவதும் எதிரொலிக்கும். தூக்கமின்மை உடல் நலனில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். போதிய நேரம் தூங்காவிட்டால் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், இதய நோய், பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு வித்திடும் என்பது ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது . ஒவ்வொரு நாள் இரவும் ஆறு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு மாரடைப்பு, மனச்சோர்வு உள்ளிட்ட உடல்நல பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது.


மேலும் தூக்கமின்மை ரத்த அழுத்த அளவை அதிகரிக்க செய்துவிடும். இதய செயலிழப்பு மற்றும் சிறுநீரக நோய்க்கு வழி வகுக்கும். தினமும் இரவில் ஏழு மணி நேரம் முதல் 9 மணி நேரம் வரை தூங்குமாறு அமெரிக்க இதய சங்கம் பரிந்துரை செய்துள்ளது. தூக்கத்தின் போது உடல் தன்னை தானே சரி செய்து கொள்ளும் இயல்புடையது. இதன் மூலம் சிறு உடல் நல குறைபாடுகள் நீங்கி விடும். இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும்.


நீங்கள் போதுமான நேரம் தூங்க முடியாமல் அவதிப்படும்போது உடல் அதிகமான அழுத்த ஹார்மோனை உற்பத்தி செய்யும் . அப்போது ரத்த நாளங்களை சுருக்கி ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்துவிடும் என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. நன்கு ஆழ்ந்து தூங்கும்போது இதயம் மற்றும் ரத்தநாளங்கள் ஓய்வெடுக்க வழிவகை ஏற்படும் .மன அழுத்தத்திலிருந்து மீளவும் உதவும். போதுமான அளவு தூக்கம் கிடைக்காவிட்டாலோ ஆழ்ந்து தூங்க முடியாவிட்டாலோ இதயம் மற்றும் ரத்த நாளங்கள் ஓய்வெடுக்க வாய்ப்பு இல்லாமல் போகும். நாள்பட்ட வளர்ச்சி ஆக்ஸிஜனேற்று அழுத்தத்திற்கு வித்திடும். ஹார்மோன் ஏற்ற தாழ்வுகளுக்கு வழி வகுத்து இதய அமைப்பபை சேதப்படுத்தும். நீரிழிவு நோய்களுக்கு வழி வகுக்கும்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News