ஆட்டோமொபைல் சந்தை சறுக்கியதா.? விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி கொடுத்த பதிலடி!
ஆட்டோமொபைல் சந்தை சறுக்கியதா.? விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி கொடுத்த பதிலடி!
By : Kathir Webdesk
ஒரு பக்கம் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க வேண்டும் என்று கூச்சலிடுபவர்கள், இன்னொரு பக்கம் வாகன விற்பனை சரிந்துவிட்டதாகவும் பலர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் முழங்குகின்றனர். இந்த இரண்டு விசயங்களுக்கும் உள்ள முரண் புரிகிறதா உங்களுக்கு?
சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் பொருட்டு மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகை வழங்க திட்டமிட்டுள்ளது. இதனால் தற்போதைய ஆட்டோமொபைல் துறை தற்காலிக சரிவை சந்தித்து வருகிறது. இதனை இந்திய பொருளாதாரமே சரிந்ததை போல மிகைப்படுத்தி செய்தி வெளியிட்டு வருகின்றன ஒரு சில தேசவிரோத ஊடங்கள். அப்படிப்பட்ட செய்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி சமீபத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், "இந்திய நிதி அமைச்சகம் தொடர்ந்து இத்துறையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்தப் பின்னடைவு தற்காலிகமானதே. சில கடன் கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளால் வாகனங்களின் தேவை மற்றும் விற்பனை குறைந்துள்ளது. வாகனங்களின் தேவையும் அதற்கான சந்தையும் விரைவில், வலுவான நிலையை எட்டும்’’
``நான் ஒரு உறுதியை மட்டும் தரமுடியும், இந்தியாவில் ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் இரண்டும் ஒரே சமயத்தில் வளரும் அளவுக்கு பெரிய சந்தையும், அதற்கேற்ற கொள்கைகள் உருவாக்குவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. இங்கு ஆட்டோமொபைலில் ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் வாகனம் இரண்டும் ஒன்றாக இருக்கும், ஒன்றாக உருவாகும் ஒன்றிலிருந்து இன்னொன்று கற்றுக்கொள்ளும்" என்று தெரிவித்துள்ளார்.