பாகிஸ்தானுக்கு ஜிந்தாபாத் என கூறியவர் தி.மு.க'வா? - பாய்ந்த நடவடிக்கை!
பாகிஸ்தானுக்கு ஜிந்தாபாத் என்று கூறிய தமிழகத்தைச் சேர்ந்த நபர் கைது.
By : Bharathi Latha
பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் தேச ஒற்றுமைக்கு எதிராகவும் பேசிய பல வளவனூர் வழி வரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். விழுப்புரம் அடுத்துள்ள வளவனூர் குப்பத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தனது whatsapp எண்ணில் இருந்து 15 ஆம் தேதி ஒரு ஆடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் பேசுகையில், நான் முன்னாள் சிறைவாசி 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் நம் பங்காளி நாடான பாகிஸ்தான் வாழ்க!
பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்னவென்றால் வட்டமேசை மாநாட்டில் ஆதி திராவிடர்களுக்கு 140 சீட்டுகளை வாங்கி கொடுத்த முகமது அலி ஜின்னா. அதனால் பாகிஸ்தான் ஜிந்தாபாத் 75வது சுதந்திர தினம் கொண்டாடும் நமது பங்காளி நாடு வாழவேண்டும் என்று அவரும் வாழ்த்து கூறுகிறார். இவ்வாறு அவர் பேசிய ஆடியோ பதிவு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எதிராகவும், விரோதமாகவும் சட்ட ஒழுங்கு சீர்குழுக்கும் நோக்கத்துடன் மக்களை தூண்டும் வகையில் பேசியதாக பிரகாஷ் மீது வளவனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.
அவரை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் கைது செய்த அவரை மீண்டும் சிறையில் அடைத்து உள்ளார்கள். இது போன்ற ஏற்கனவே வட மாநிலத்தில் தனது வீட்டின் தேசியக்கொடியை ஏற்றுவதற்கு பதிலாக பாகிஸ்தானின் கொடியை ஏற்றி நபர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Vikatan News