சமூக இடைவெளி மூலம் வைரஸை தடுக்க முடியாதாம் ! வெளியான ஆய்வு முடிவு !
சமூக இடைவெளி மூலம் வைரஸை பரவலை தடுக்க முடியாது என்று ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது.
By : Bharathi Latha
தற்பொழுது கடைபிடிக்கப்படும் சமூக இடைவெளி மூலம் வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முடியாது என்று ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது குறிப்பாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக, முக கவசம் சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற பல்வேறு வழிகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் இந்த மாதிரியான ஒரு ஆய்வு முடிவு மக்களைப் பெரிதும் அச்சுறுத்தும் விதமாக அமைந்துள்ளது. வீரியமிக்க வைரஸ் காற்று மூலமாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு விரைவாக ஊடுருவுகிறது.
குறிப்பாக இந்த ஆராய்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள் மூன்று காரணிகளை ஆய்வு செய்தனர். ஒரு இடைவெளியில் காற்றோட்டத்தின் அளவு, வைரஸ் துகள்கள் எவ்வளவு வேகமாகப் பரவுகின்றன, அதன் பயணிக்கும் தூரம் என்பது போன்ற பல்வேறு விதங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன. முக கவசம் இல்லாமல் பாதிக்கப்பட்ட நபரின் பேச்சிலிருந்து வைரஸ் நிறைந்த துகள்கள் ஒரு நிமிடத்திற்குள் மற்றொருவரின் சுவாச மண்டலத்திற்கு, இரண்டு மீட்டர் தூரத்திற்கு கூட விரைவாக பயணிக்க முடியும் என்று ஆய்வு காட்டுகிறது.
அத்தனை விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டும் தான் முழுமையான பாதுகாப்பு நாம் பெற முடியும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அதிலும் குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்க நடவடிக்கைகளை நிச்சயம் மேற்கொள்ள வேண்டும்.
Input & image courtesy:Indianexpress