இந்த சூரிய கிரகணத்தின் போது சூரியனை பார்க்க கூடாது - ஏன் தெரியுமா?
25 ஆம் தேதி நிகழும் சூரிய கிரகணத்தின் போது சூரியனை பார்க்க வேண்டாம் என்று எச்சரிக்கை.
By : Bharathi Latha
பகுதி சூரிய கிரகணம் வருகின்ற 25ஆம் தேதி மாலை நிகழும் பொழுது வெறும் கண்களாலோ, தொலைநோக்கி மூலமாகவோ, சூரியனை பார்க்க முயற்சிக்க வேண்டாம் என்று பிர்லா கோளரங்க இயக்குனர் சௌந்தரராஜன் கூறினார். பூமி சூரியனை சுற்றி வரும் பாதையை உள்ளடக்கிய தளம் எட்லிப்டஸ் தளம் என்று அழைக்கப்படுகிறது. நிலவு பூமியை மற்றொரு சிறிய நீர் வட்ட பாதையில் சுற்றி வருகிறது. அதனால் பூமி சூரியனை சுற்றிவரும் தளத்தில் நிலவும் பூமியை சுற்றுவதில்லை. சுமார் ஐந்து டிகிரி சாய் கோணத்தில் சுற்றிவரும். எனவே ஒவ்வொரு சுற்றின் போதும் நிலவு எட்ளிப்டஸ் தளத்தை இருமுறை சந்திக்கும் சில நேரங்களில் பூமியையும் சூரியனையும் இணைக்கும் கற்பனையான கோட்டில் நிலவு எக்களிப்டஸ் ஸ்தலத்தை கடக்கும் பொழுது மட்டும்தான் சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
இந்நிலையில் வருகின்ற 25ஆம் தேதி அதாவது தீபாவளிக்கு அடுத்த நாள் இந்த நிகழ்வு நிகழ்கிறது. ரஷ்யாவின் தெற்கு பகுதிகள் கஜகஸ்தான், ஆப்பிரிக்கா நாடான வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் ஆசியாவின் சில பகுதிகளில் பகுதிநேர சூரிய கிரகணத்தை காணலாம். பகல் 12.19 மணிக்கு ஆரம்பித்து மாலை 6:32 மணிக்கு முடியும். உலகின் எப்பகுதியிலும் முழு சூரிய கிரகணம் நிகழாது. ரஷ்ய நாட்டின் மத்திய பகுதியில் சூரியனை 80 சதவீதம் சந்திரன் மறைக்கும். சென்னை நேரடி மாலை 5:15 மணிக்கு கிரகணம் லேசாக ஆரம்பித்து 5.44 முடிந்துவிடும்.
எனவே தமிழகத்தில் குறுகிய காலம் மற்றும் வானில் சூரியன் மறையும் முன் இந்நிகழ்வு நடக்கிறது கிரகணம் ஆரம்பிக்கும் போது தொடு வானில் இருந்து சுமார் ஏழு மீட்டர் உயரத்தில் மட்டுமே சூரியன் காணப்படும். இந்தியாவின் மேற்கு பகுதிகளில் உள்ள நகரங்களில் இந்நிகழ்வு காணுகின்றார்களோ வெறும் கண்களால் பார்க்க வேண்டாம். சூரிய கிரகணத்தின் போது சாதாரணமாகவோ, வெறும் கண்களாகவோ அல்லது தொலைநோக்கி அல்லது பைனாகுலர் மூலமாகவோ காணக்கூடாது. அப்படி செய்தால் கண் பார்வை இழக்க நேரிடலாம். சூரிய ஒளியை ஒரு சிறிய ஐந்து மில்லி மீட்டர் தொலைவிட்டு அட்டை ஒட்டப்பட்ட கண்ணாடி மூலம் இருட்டு அறையில் சூரியனின் பிம்பத்தையும் கிரகணத்தையும் காணலாம. பற்ற வைப்பவர்கள் வெல்டிங் கண்ணாடி நிறைய எண் 14 மூலம் சில வினாடிகள் சூரியனை பார்க்கலாம் என்று தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் இயக்குனர் கூறுகிறார்.
Input & Image courtesy: News