“எதை அரசியலாக்க வேண்டும், எதை அரசியலாக்க கூடாது என்பதை சில அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்” - ரஜினிகாந்த் சவுக்கடி!!
“எதை அரசியலாக்க வேண்டும், எதை அரசியலாக்க கூடாது என்பதை சில அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்” - ரஜினிகாந்த் சவுக்கடி!!
By : Kathir Webdesk
“எதை அரசியலாக்க வேண்டும் எதை அரசியலாக்ககூடாது என்பதை அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறி காஷ்மீர் விவகாரத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் அரைவேக்காட்டு அரசியல்வாதிகளுக்கு நடிகர் ரஜினகாந்த் சவுக்கடி கொடுத்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய, புத்தக வெளியீட்டு விழாவில், நடிகர் ரஜினி பேசுகையில், “மத்திய அரசின் காஷ்மீர் நடவடிக்கையை வரவேற்கிறேன். மோடியும், அமித்ஷாவும், கிருஷ்ணர் - அர்ஜுனர் போன்றவர்கள்” என்று பாராட்டினார்.
இந்த நிலையில் சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.
காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ராஜ தந்திரத்துடன் கையாண்டுள்ளனர். எனவே தான் அவர்களை கிருஷ்ணர், அர்ஜுனன் போன்றவர்கள் என்றேன்.
காஷ்மீர் விவகாரம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனை என்பதால் பாராட்டு தெரிவித்தேன். எதை அரசியலாக்க வேண்டும், எதை அரசியல் ஆக்கக்கூடாது என்பதை சில அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு நடிகர் ரஜிகாந்த் கூறினார்.