Kathir News
Begin typing your search above and press return to search.

சோனியா காந்தியின் மகள் பிரியங்கா வத்ராவின் பொய் அம்பலம்! விளம்பரத்திற்காக இவ்வளவு கீழ்த்தரமாக இறங்குவார்களா!

சோனியா காந்தியின் மகள் பிரியங்கா வத்ராவின் பொய் அம்பலம்! விளம்பரத்திற்காக இவ்வளவு கீழ்த்தரமாக இறங்குவார்களா!

சோனியா காந்தியின் மகள் பிரியங்கா வத்ராவின் பொய் அம்பலம்! விளம்பரத்திற்காக இவ்வளவு கீழ்த்தரமாக இறங்குவார்களா!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Dec 2019 3:25 AM GMT


உத்திர பிரதேசம் லக்னோவில் சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சிகளில், கலந்து கொள்வதற்காக கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா வத்ரா கலந்து கொண்டார்.
அதன் பின், தேசத்திற்கு எதிராக பேசியதால் கைது செய்யப்பட்ட முன்னாள் காவல் துறை அதிகாரி தாராபுரியின் குடும்பத்தாரை சந்திக்க போவதாக பிரியங்கா வத்ரா திடீரென்று திட்டமிட்டுள்ளார். இதற்கு லக்னோ காவல் துறையினர் அனுமதி கொடுக்கவில்லை. இதனால் விளம்பரம் தேடுவதற்காக பிரியங்கா வத்ரா கட்சித் தொண்டரின், இருசக்கர வாகனத்தில் சென்றார் . அதையும் காவல்துறையினர் தடுத்தனர் சரி நம்ம நடந்து செல்வோம் என அவரின் விளம்பரம் தொடர்ந்தது. அவரின் நாடகம் முடிவடையும் சூழ்நிலை வந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்தார் பிரியங்கா வத்ரா


அந்த சந்திப்பில் காவல் துறையினர் என்னிடம் அத்துமீறி நடந்து கொண்டனர், என்னுடைய கழுத்தை நெரித்தனர்' என, பிரியங்கா வத்ரா பேட்டியளித்தார். இதனை தொடர்ந்து பிரியங்காவின் பாதுகாப்பை கவனித்து வந்த பெண் காவல் துறை அதிகாரி அர்ச்சனா சிங்கிடம், லக்னோ காவல்துறை உயர் அதிகாரிகளும், அதன் மாவட்ட நிர்வாகமும் விளக்கம் கேட்டிருந்தது.


இதனை தொடர்ந்து, விளக்கக் கடிதத்தை அளித்துள்ளார். பிரியங்கா வத்ராவிற்கு பாதுகாப்பை கவனித்த அந்த பெண் அதிகாரி அவர் அளித்துள்ள கடிதத்தில் :


பிரியங்கா வத்ரா கூறியுள்ளதை, உத்தர பிரதேச பெண் காவல் துறை அதிகாரி மறுத்துள்ளார். அவர் பொய் சொல்கிறார் கழுத்தை நெரிக்கவில்லை என்னுடைய கடமையைத் தான் செய்தேன்' பிரியங்கா வத்ரா லக்னோவில் சில இடங்களுக்கு மட்டும் செல்வதாக, பிரியங்காவின் பயண திட்டத்தில் கூறப்பட்டிருந்தது. ஆனால், திடீரென அவர், பயணத்தை மாற்றினார்.


இதனையடுத்து அவரின், கட்சியினரிடம் விசாரித்தேன். திடீரென பயண பாதையை மாற்றினால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும். சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது குறித்து கூறினேன் ஆனால், பிரியங்கா, திடீரென இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தார். அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதனால், அவரின் பாதுகாப்பு கருதி அவரை தடுத்தேன் .


அவர் சொல்வது போன்று , கழுத்தை நெரிக்கவில்லை.சமூக வலைதளத்தில் பொய் செய்திகளை அவர் வெளியிட்டுள்ளார். நான் என்னுடைய கடமையை சரியாக செய்தேன். என பிரியங்கா வத்ராவின் பொய்யை தோலுரித்து காட்டினார்.


கேவலம் விளம்பரம் தேடுவதற்காக இப்படியெல்லாம் பொய் சொல்வர்களாக என நெட்டிசன்கள் சோனியாகாந்தி மகள் பிரியங்கா வத்ராவை கிழித்து தொங்க விடுகின்றனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News