Kathir News
Begin typing your search above and press return to search.

தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்த கடும் எச்சரிக்கை! என்ன தெரியுமா?

சரியான காரணம் இன்றி ஓடும் ரயிலில் அபாய சங்கலியை பிடித்து இழுத்தால் மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.

தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்த கடும் எச்சரிக்கை! என்ன தெரியுமா?
X

KarthigaBy : Karthiga

  |  29 Jun 2023 1:30 PM GMT

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்த நேற்று முன்தினம் சென்னை சென்ட்ரல் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. ரயில் சூல்லூர்பேட்டை- அக்கம்பேட்டை இடையில் உள்ள கலிங்க ஆற்றுப்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது அதிகாலை 4 மணி அளவில் முன்பதிவில்லாத பெட்டியில் இருந்த பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். உடனடியாக ரயில் பாலத்தின் நடுவிலேயே நிறுத்தப்பட்டது.


இதனால் என்ஜினில் இருந்த அந்த குறிப்பிட்ட ரயில் பெட்டிக்கு செல்ல முடியாமல் ரயில் ஓட்டுனர் தவித்தார். மேலும் முன்பதிவில்லா பெட்டியில் அபாய சங்கலியை சரி செய்ய ரயில் பெட்டிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பெயரில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் பாலத்தின் மேலே செல்ல முடியவில்லை.


இதனால் அங்கே ஆற்றுப்படுகையில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் ரயில் பெட்டிக்குள் நுழைந்த ரயில்வே போலீசார் அபாய சங்கலியை சரி செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் தாமதத்திற்கு பின்னர் ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றத. இந்த நிலையில் ரயில் பயணிகள் சரியான காரணம் இல்லாமல் அபாய சங்கலியை இழுக்க வேண்டாம் என்று தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.


இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில் அபாய சங்கிலி மற்றும் ரயிலின் வசதியை தவறாக பயன்படுத்துவது ரயில்வே விதிகளின் படி குற்றச் செயலாகும். அவசர தேவை இல்லாமல் ரயில் சங்கிலியை இழுத்தால் ரயில்வே சட்டத்தின் 141 -ஆவது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News