விண்வெளி கழிவுகளை தடுக்கும் சோதனை வெற்றி-இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்!
விண்வெளி கழிவுகளை முற்றிலும் தடுப்பதற்கான இஸ்ரோவின் சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்.
By : Karthiga
விண்வெளி கழிவுகள் என்பன பூமியின் வட்டப்பாதையில் பூமியைச் சுற்றிவரும் கழிவுகள் ஆகும். பூமியிலிருந்து விண்ணுக்கு செயற்கைகோள்களை சுமந்து செல்லும் ராக்கெட்டுகளின் பாகங்கள் ஆகும். அத்துடன் பழைய செயலிழந்த மற்றும் கைவிடப்பட்ட செயற்கைக்கோள்கள் மற்றும் அவற்றிலிருந்து கழன்ற பாகங்கள் அனைத்தும் விண்வெளி கழிவுகளாக உள்ளன. இவை அனைத்தும் அதிவகத்தில் பூமியை சுற்றி வருகின்றன பூமியில் உள்ள பெரும் பிரச்சனைகளில் ஒன்று குப்பைகள் இது விண்வெளியிலும் பிரச்சனையாக தான் இருக்கிறது.
ராக்கெட் பாகங்கள் பல இப்போது, நமக்கு பல சேவைகளை வழங்க உதவியாக இருக்கும் செயற்கைக்கோள்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று சர்வதேச அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நாடுகள் முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன .
அந்த வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்வெளி குப்பைகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. குறிப்பாக கடந்த ஜனவரி 1-ஆம் தேதி பி.எஸ்.எல்.வி சி-58 ராக்கெட் மூலம் எக்ஸ்போர்ட் என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக பி எஸ் எல் வி ஆர்பிடல் எக்ஸ்பிரிமென்டல் மாட்யூல்- 3 என்று அழைக்கப்படும் இஸ்ரோவின் விண்வெளி ஆய்வு திட்டம் பரிசோதிக்கப்பட்டது .
இந்த சோதனையானது விண்வெளியில் 650 km முதல் 350 km வரையிலான சுற்று பாதையில் நடத்தப்பட்டது .இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக நிறைவேற்றப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் துளி அளவு கூட விண்வெளியில் எந்த பாகத்தையும் விடாமல் வெற்றிகரமாக பூமியின் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழைந்தது. இதனால் சுற்றுப்பதியில் குப்பைகளை முற்றிலும் இடுவது தவிர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக நாடுகளை விஞ்ஞானிகள் வியக்க வைத்துள்ளதுடன் இது ஒரு முக்கியமான மைல்கள் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்.
SOURCE :DAILY THANTHI